முள் இல்லா மூங்கில் சாகுபடி

மதுரை வனத்துறை சார்பில் வேம்பரளியில் முள்ளில்லா மூங்கில் வளர்ப்பு பற்றி ஆராய்ச்சி நடக்கிறது.

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த முள்ளில்லா மூங்கில் வளர்ப்பது விவசாயிகளுக்கு லாபகரமான தொழிலாக மாறியுள்ளது.

மதுரை ஆராய்ச்சி வனச்சரகம் சார்பில், நத்தம் ரோடு கடவூர் வேம்பரளியில் 30 ஏக்கர் பரப்பளவில் முள்ளில்லா மூங்கில் அறிமுக சோதனை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 அடி உயரம் வளரும் முள்ளில்லா மூங்கிலின் சுற்றுப்பகுதி பருமனாகவும், உறுதித்தன்மையுடனும், நேர்குத்தாகவும் வளரும் தன்மை கொண்டது.
முள்ளில்லா மூங்கிலை ஒரு முறை நடவு செய்யும்போது வேர்பகுதி நிலப்பரப்பில் படர்ந்து அடுத்தடுத்து மூங்கில் பல கிளைகளாக வளர்ந்து அதிக லாபத்தை ஈட்டித்தரும்.

இவ்வகையான மூங்கில் கூடைகள், நாற்காழிகள், கட்டில் போன்ற மரப்பொருட்கள் தயாரிக்கவும், பந்தல் அமைக்கவும் பயன்படுகிறது.

முள்ளில்லா மூங்கில்களை வயல் வரப்புகள், கண்மாய் கரைகளில் வளர்க்க விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.­

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *