முள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்

உடுமலைப்பேட்டையில் தேசிய மூங்கில் இயக்கத் திட்டத்தின் கீழ் முள் இல்லா மூங்கில் சாகுபடியை ஊக்குவித்து மானிய உதவிகள் வரப்பெற்றுள்ளது.

ஒரு எக்டேருக்கு ரூ.8000/- மான்யமாக தரும் உன்னத மூங்கில் திட்டம் மூலம் இயற்கை வேளாண் உத்தியான காற்று தடுப்பான் மற்றும் உயிர்வேலி மூலம் உபரி வருமானம் உயிர்க்குலங்கள் பல்கிப் பெருகிட கீழே விடும் மூங்கில் இலைகள் மூலம் வாய்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கு பெரும் உதவி, மண்ணின் பௌதிகத்தன்மை, நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிப்பு போன்ற ஏராளமான நன்மைக்கு வழி உள்ளது.
விவசாயிகள் தனது சொந்த செலவில் கன்றுகளைப் பெற்று வாங்கி நட்டு அதன் புகைப்படம், சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு மற்றும் விண்ணப்பம் தந்து மூங்கில் சாகுபடி மானியம் பெற டாக்டர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை, அவர் தெரிவித்துள்ளார்.

நட்ட 3ம் ஆண்டு முதல் அறுபது ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒரு ஏக்கரில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய தரமான மூங்கில் வளர்த்து அறுவடை செய்து உயர்நிலை அடையலாம்.
மூங்கில் கன்றுகள் குறித்து மேலும் விவரம் பெற 09842007125 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *