மூங்கில் சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ. 2 லட்சம் வருமானம்

“ஓராண்டில் ஒரு ஏக்கரில் மூங்கில் சாகுபடி செய்து ரூ. 2 லட்சம் வருமானம் பெறலாம்” என, மூங்கில் சாகுபடி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் தோட்டக்கலைத் துறை சார்பில் மூங்கில் சாகுபடி கருத்தரங்கு நடந்தது. துணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். கலெக்டர் சகாயம் துவக்கி வைத்து பேசியதாவது:

விவசாயிகள் நெல், கரும்பு சாகுபடி செய்வது போல, மூங்கிலையும் சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட்டு, மாற்று விவசாயத்தை சிந்திக்க வேண்டும். மதுரையில் இந்த ஆண்டு 25 எக்டேர் நிலத்தில் மூங்கில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் விளைபொருளை நகரத்தில் உள்ள வணிகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பதைவிட, நேரடியாக மதிப்புக் கூட்டு பொருளாக விற்றால் பலமடங்கு லாபம் கிடைக்கும். இதற்கு “நபார்டு’ மூலம் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னோடி விவசாயி பாலசுப்ரமணியன் பேசியதாவது:

  • புல்வகையை சேர்ந்த மூங்கில், 47 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை பெற்று, 35 சதவீத ஆக்சிஜனை வெளியிட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்கிறது.
  • ஒரு ஏக்கரில் 30 டன்வரை சருகுகளை உதிர்ப்பதால், அவை மக்கி இயற்கை உரமாக மாறி மண்வளம் பெருகுகிறது.
  • ஒரு ஏக்கரில் 2 ஆயிரம் மூங்கில் சாகுபடி செய்தால் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கிடைக்கும்.
  • பவர் பிளான்ட், கைவினை பொருள், காகிதம், கட்டுமான வேலைக்கு மூங்கில் தேவை.
  • மூங்கில் குருத்தில் இருந்து ஊறுகாய், பொரியல், கேசரி, மிட்டாய், அல்வா, இட்லி பொடி தயாரிக்கலாம்.
  • இதன் தேவை அதிகம் என்பதால் பிறமாநிலத்தில் இருந்து வாங்குகின்றனர்.நாமே பயிரிட்டால் நல்ல வருமானம் பெறலாம்.
  • இதுதொடர்பாக 09486408384  என்ற எண்ணில் விபரம் பெறலாம், என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *