மூங்கில் சாகுபடி செய்வது எப்படி

  • நமது நாட்டின் பொருளாதாரத்தில் மூங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. மனிதனின் அன்றாட தேவைக்கு மூங்கில் இன்றியமையாத பொருளாக பயன்பட்டு வருகிறது.
  • கைவினை பொருட்கள் செய்யவும், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் காகித ஆலைகளுக்கும் மூங்கில் ஏற்ற மூலப்பொருளாகும்.
  • தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவுநீரில் மூங்கிலை பயிர் செய்யலாம்.
  • சாயப்பட்டறையிலிருந்து வெளியேறும் கழி வு நீரினால் நிலத்தடிநீரின் தன்மை மாற்றுவதுடன் மேல்மட்ட மண்ணும் எந்த பயிரும் செய்ய உகந்ததற்காக மாறிவிடுகிறது.
  • அந்த இடத்தில் மூங்கில் சாகுபடி செய்தால் சாயக்கழிவு நீரை மூங்கில் பயிர் முற்றிலும் எடுத்துக் கொண்டு நிலத்தடிநீரை பாதுகாக்கிறது.
  • இதற்கு செலவு மிகவும் குறைவு என்பதுடன் நல்ல வருவாயையும் ஈட்டி தருகிறது.
  • பொதுவாக மூங்கில் நன்கு வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்க மண் வளம் நிறைந்ததாகவும், அதிக அங்கக சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

பயிரிடும் முறை:

  • மூங்கில் பயிரிட வண்டல் மண் படு கை நிலங்கள், சரளை ம ண், கண் வாய் கரைமண், ஓடை மண், வண்டல் கலந்த களிமண் மற்றும் மணற்பாங்கான நிலங்களில் நன்கு வளரக்கூடியது.
  • நிலத்தை நன்றாக உழுது நாற்று நட 1மீ*மீ*மீ அளவுள்ள குழிகளும், 5மீக்கு5மீ இடைவெளியில் ஒரு குழிக்கு பத்து கிலோ தொழுஉரம், ஐம்பது கிலோ பாஸ்போ பாக்டீரியா, வேம் ஐம்பது கிலோ, அசோஸ்ஸ்பைரில்லம் 25 கிலோ, டி.ஏ.பி 50 கிலோ இட வேண்டும்.
  • மூங்கில் பயிரை முதலாம் ஆண்டிலிருந்தே பராமரிக்க வேண்டும். தூர் பராமரிப்பதினால் கழிகள் நேராக வளர்ந்து அதிக லாபம் தரும்.
  • பக்க கிளைகள் மற்றும் நேராக வளராத கிளைகளை அகற்ற வேண்டும்.
  • மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளிலும், தூர்களிலும் மண் அணைத்தால் அதிக கழிகள் உண்டாகும்.
  • நட்ட வடிவிலோ அல்லது “வி’ வடிவிலோ வெட்ட வேண்டும். இவ்வாறு வெட்டுவதால் சேதாரம் குறையும்.
  • ஒவ்வொரு அறுவடைக்கு பிறகும் தூர் ஒன்றுக்கு மக்கிய தொழுஉரம் 20 இடுதல் அவசியம்.
  • ஒரு ஹெக்டருக்கு 400 மூங்கில் தூர்கள் ஒரு தூருக்கு ஆறு கழிகள் வீதம் 2,400 கழிகள் கிடைக்கும்.

மூங்கில் பயிரிட விரும்பும் விவசாயிகள் மூங்கில் சாகுபடி குறித்தும், அதன் ரகங்கள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் தா.பேட்டை தோட்டக்கலை அலுவலகத்தில் வேளாண் அலுவலர்களை நேரில் சந்திந்து விளக்கம் கேட்டு தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம்.  இவ்வாறு தா.பேட்டை  தோட்டக்கலை துறை உதவி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “மூங்கில் சாகுபடி செய்வது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *