வாழையில் ஊடுபயிராக கொத்தவரை சாகுபடி

ஈங்கூர் பகுதியில் வாழை பயிருடன் ஊடு பயிராக கொத்தவரங்காய் சாகுபடி நடக்கிறது.ஈங்கூர் பகுதியில் கிணற்றுப் பாசனத்தில், அதிகளவு வாழை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி நடக்கிறது. பதது மாதப் பயிரான வாழையில் ஊடு பயிராக விவசாயிகள் கொத்தவரங்காய், சிறிய வெங்காயம், கத்தரி போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.

  • 90 நாள் பயிரான கொத்தவரங்காயை ஊடுபயிராக அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
  • விதை நடவு செய்த 30வது நாளிலிருந்து காய்ப்பு பருவத்துக்கு வரும்
  • 70 முதல் 90 நாள் வரை ஒரு ஏக்கரில் வாரத்துக்கு 80 முதல் 100 கிலோ வீதம் காய் உற்பத்தியாகிறது.
  • உபரியாக கொத்தவரங்காய் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.
  • இது தவிர விவசாயிகள் சிறிய வெங்காயம், கத்தரி போன்ற பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர்.
  • இருப்பினும், விவசாய தொழிலாளர்களின் கூலி உயர்வால், களை எடுப்பது முதல் அறுவடை வரை அதிக பணம் செலவாவதால், விவசாயிகள் போதிய லாபம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *