வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி!

கோபி சுற்று வட்டாரத்தில் கிணற்று பாசனத்தில் வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது.

கோபி பாசனப் பகுதிகள் வறண்டு காணப்படுவதால், தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, பாகற்காய், காலிஃபிளவர், புடலை, சின்ன வெங்காயம், பூசணி வகைகள், முள்ளங்கி, கீரை, பூ வகைகளுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர்.

கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், அளுக்குளி உள்ளிட்ட பகுதிகளில், வாழையில் ஊடுபயிராக செண்டு மல்லிகைப்பூ பயிரிடப்பட்டது. 90 நாள்கள் பிறகு தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

  • விவசாய கூலி ஆள்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. பெண்களுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை கூலி கொடுத்தால் கூட, வேலைக்கு வர தயங்குகின்றனர்.
  • பல ஆண்டுகளாக விவசாய கூலி வேலை செய்யும் நபர்கள் மட்டுமே பணி செய்து வருகின்றனர்.
  • விவசாய கூலி ஆள்கள் பற்றாக்குறையால், தோட்டக்கலைப் பயிர்களாக காய்கறி மற்றும் பூ வகைக்கு மாறி உள்ளோம்.
  • வாழை மற்றும் மஞ்சளில் செண்டுமல்லி ஊடுபயிராக செய்யலாம். ஒரு கிலோ பாக்கெட் செண்டுமல்லி விலை ரூ.2,000-க்கு விற்கப்படுகிறது.
  • ஏக்கருக்கு ஒரு கிலோ விதை பயன்படுத்தலாம்.
  • மாதத்தில் இரு முறை மருந்து தெளிக்க வேண்டும்.
  • செண்டுமல்லி மூன்று மாத பயிர்;
  • அறுவடைக்கு தயாரான பின் எட்டு வாரங்களில் பூ அறுவடை செய்யலாம்.
  • அறுவடை செய்யப்படும் பூ கம்பெனி, பூ மார்க்கெட்டில் விற்பனை செய்கிறோம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *