வாழை மகசூலைத் தடுக்கும் இலைப்புள்ளி நோய்

கன்னியாகுமரி மாவட்டத்தில், வாழை மகசூலைத் தடுக்கும் வகையில் இலைப்புள்ளி நோய்த் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நோயைத் தடுப்பது குறித்து தக்கலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷீலா ஜான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • வாழையில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் சிகடோகா இலைப்புள்ளி நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.
  • இந்நோய் தாக்கிய இலையின் மேற்பகுதியில் வெளிறிய மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றி அவை விரைந்து நீள் வடிவத்தில் பழுப்பு நிறமடைகின்றன.
  • பல புள்ளிகளை ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின்பு இலை காய்ந்து சருகாகிறது.
  • இதனால் ஒளிசேர்க்கைப் பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைப்படுகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மரத்தில் குலை சிறுக்கும், காய்கள் முதிர்ச்சி அடையாமல் பிஞ்சிலே பழுக்கும் நிலை ஏற்படும்.
  • இந்நோயைப் பரப்பும் பூஞ்சாணம், மழை, பனித்துளிகள் மற்றும் காற்று மூலம் விரைவில் பரவுகின்றன.
  • நெருக்கமான நடவு மண்ணில் அதிக களைகள், வடிகால் வசதியில்லாத மண், பனி மற்றும் மழைக் காலங்கள் போன்ற சூழ்நிலைகளில் இந்நோய் அதிகமாக பரவுகிறது.
  • இந் நோயைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும்.
  • வாழைத் தோட்டங்களில் நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும். களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். தகுந்த இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • ஒரு மாத இடைவெளியில் காரிபன்டசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் அல்லது மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது ஆக்சி குளோரைடு 2.5 கிராமை ஒரு லிட்டர் நீரில் கலந்து ஒட்டும் திரவத்துடன் சேர்த்து இலைகள் நன்று நனையும்படி தெளிக்க வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *