வெண்டைக்காய் பறிக்கும் கருவி அறிமுகம்

காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் வெண்டைக்காய் பறிக்கும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெண்டைக்காய் பெரும் பாலும் எல்லா மாவட்டங்களிலும் சாகுபடியாகிறது. விளைந்த வெண்டைக்காய்களை கையால் பறிக்கும்போது, அதில் உள்ள சிறிய முட்கள் போன்ற “சுனை’கள் இருக்கும். காய்களை கையால் பறிக்கும் போது சுனைகளால் ரத்தக் காயம் ஏற்பட்டுவிடும்.

ஒரு மணி நேரத்தில் 2 கிலோ அளவிலான காய்களை மட்டுமே பறிக்க முடியும்.

காய் பறிக்கையில் காயம் ஏற்படுவதை தடுக்க, பஞ்சாப் விவசாய பல்கலை வெண்டைக்காய் பறிக்க “கத்தரிப்பான்’ போன்ற கருவியை கண்டுபிடித்துள்ளது.

இக்கருவியை தமிழக விவசாயிகளுக்காக காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் அறிமுகப்படுத்தி உள்ளது. கருவி மூலம் ஒரு மணி நேரத்தில் 10 கிலோ வெண்டைக்காய் பறிக்கலாம்.

இதனால் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை தீரும். ஒரு கருவி ரூ.60 க்கு கிடைக்கிறது. விவசாயிகள் தொடர்பு கொண்டால் கருவியை வாங்கி தருவோம்”, என்றார். இவரை 09043830622ல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *