பனி கரடியின் வாழ்கை போராட்டம்

பனி கரடிகள் (Polar bear) போட்டோகளை நாம் பார்த்து இருக்கிறோம். இந்த அழகான கரடிகள் வட துருவத்தில் மட்டுமே உள்ளன. தென் துருவத்தில் இவை இல்லை. தென் துருவம் அண்டார்டிக்கா என்ற கண்டம் இருக்கிறது. எப்போதும் பனி மூடிய இந்த கண்டம் இருக்கிறது.

Courtesy: Wikipedia

ஆனால், வட துருவம் தென் துருவத்தை போன்று ஒரு கண்டம் இல்லை. குளிர் காலத்தில், இங்கே நீர் உறையும். இந்த உறைந்த நிலத்தில், பனி கரடிகள் வாழ்கின்றன.

ஆனால் மனிதனால் உண்டாக்க பட்ட உலக வெப்பமயமாகும் நிகழ்வால் (Global warming) , இந்த வட துருவ பனி பாறைகள் கரைய ஆரம்பித்து விட்டன.
இதனால், பனி பாறைகள் மீது வாழும் இந்த கரடிகள் வாழ்கை கேள்வி குறியாகி விட்டது.

சென்ற மே மாதம் ஒரு பனி கரடி, தன் குழந்தையுடன் ஒரு பனி பாறையை தேடி 500 கிலோமீட்டர் நீரில் நீந்தி பார்த்தது. சரியான அளவினால் ஆன பனி பாறை கிடைக்கததால்  முடிவில் அம்மா கரடி பிழைத்தது ஆனால் குழந்தை இறந்தது.

இப்படியே போனால், பனி கரடியை பொம்மை வடிவத்தில் தான் நம் குழந்தைகள் பார்க்க வேண்டி இருக்கும்

நன்றி:Scientific American

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *