இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

இயற்கை வேளாண் அறிஞரும் தமிழ் நாட்டில் இயற்கை விவசாயத்தை பரப்பிய Dr நம்மாழ்வார் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.

Dr நம்மாழ்வார் அவர்கள் தமிழகத்தில் இட்டுள்ள இயற்கை விவசாயம் என்ற விதை நன்றாக செழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் என்று நம்புகிறோம்.

தினமலரின் வந்துள்ள செய்தி

Tamil_News_large_88479520131230214728

 

 

 

 

 

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.

தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல.

இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் மரணமடைந்தார்.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Organic-farming-veteran-Nammalvar-dead/articleshow/28152899.cms

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *