கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி

வரும் 2013 ஜூன், 15ம் தேதி, 21வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்குகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 50 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மா வகைகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மட்டுமன்றி வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள, 50க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மாங்கூழ் ஐரோப்பா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய செலவாணியாக ஈட்டப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிக அளவு மா சாகுபடி செய்வதால் ஆண்டு தோறும், அகில இந்திய மாங்கனி கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது

மாங்கனி கண்காட்சியில், மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சிறந்த ரகத்தை விளைவித்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

21வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி 2013 ஜூன், 15ம் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் துவங்குகிறது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *