கோவையில் வேளாண் வணிகக் கண்காட்சி

கோவை மாவட்ட சிறு தொழில் உரிமையாளர் சங்கம் (கொடிசியா) சார்பில் கோவையில் ஜூலை 17 முதல் 20-ஆம் தேதி வரை வேளாண் வணிக கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ் 2015) நடைபெறுகிறது.

z
 

 

 

 

இதுகுறித்து கொடிசியா தலைவர் இ.கே.பொன்னுசாமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கே.ராமசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
15-வது வேளாண் கண்காட்சியை 2015 ஜூலை 17 முதல் 20-ம் தேதி வரை கொடிசியா, நடத்துகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண் இயந்திர உற்பத்தியாளர் சங்கம், பால் பண்ணை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட ஏராளமான மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதில் தமிழ்நாடு, கேரளம், குஜராத், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி, இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்கின்றன. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் 300 நிறுவனங்கள் தங்களது அரங்குகளை கண்காட்சியில் அமைக்க உள்ளன.

இந்தக் கண்காட்சியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு – http://agriintex.codissia.com/index.php/site/contact

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “கோவையில் வேளாண் வணிகக் கண்காட்சி

  1. இரா.இராமமூர்த்தி says:

    இதைப் போல் கண்காட்சி வருடத்தில் 2 அல்லது 3 முறையாவது நடத்தப்பட வேண்டும்.அதுமட்டும் அல்ல இந்த வேளான் கண்காட்சி நடக்ககிறதை விவசாயிடத்தில் போய் சேரும் வகையில் விளம்பரபடுத்த வேண்டும். ஏனென்றால் விவசாயிக்கு தேவை அவனது நம்பிக்கை மட்டும் அல்ல நல்ல விசயங்களும்,விவரங்களும் தேவை அதற்கு தான். கண்காட்சிகள் வெரும் காட்சி பொருட்கள் மட்டும் அல்ல கற்பனைகளை செதுக்கும் கருவி. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *