சோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள்

தேனி சின்னமனூரில் உள்ள “சோலார்’ உலர் கலனை (Solar Dryers) பயன்படுத்த, விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
சின்னமனூரில் கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் உலர் கலன் அமைக்கப்பட்டது.

இதில் விவசாயிகள் தேங்காய்களை, கொப்பரை தேங்காய்களாக மாற்றுவது, கடலை, மிளகாய், எள், பாக்கு, மாட்டு தீவனம் உள்ளிட்ட விளை பொருட்களை பாதுகாப்பான முறையில் உலர்த்தி கொள்ளலாம்.

இம்முறையில் தூசி படியாது, பொருளின் நிறம் மாறாது.  இதற்கு விவசாயிகளிடம் இருந்து, மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது.

வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயிகள் இந்த உலர்கலன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.

எனவே,விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை பாதுகாப்பான முறையில் உலர்த்துவதற்கு, இந்த கலனை பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டணம் விவசாயிகள் விருப்பப்படி கொடுக்கலாம், என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *