ஜப்பானில் உலகின் முதல் "ரோபோ" விவசாய பண்ணை!

மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் உணவளிக்கும் விவசாய பணிகளுக்கு, சர்வதேச அளவில் சமீபகாலமாக, பணியாட்கள் கிடைக்காத சூழ்நிலை காணப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, இயந்திர மனிதர்களை (ரோபோ) கொண்டு செயல்படும் விவசாய பண்ணையை உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் களமிறங்கியுள்ளது.

ஜப்பானின் கியோட்டோவை தலமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் இந்த ரோபோ விவசாய பண்ணையை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

automated-farming

4,400 சதுர மீட்டரில், படிநிலை முறையில் (floor-to-ceiling shelves) அமைய உள்ள இந்த பண்ணையில் கீரை வகைகள் பயிரிடப்பட உள்ளன. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் கட்டு கீரைகளை அறுவடை செய்யும் வகையில் இந்த பண்ணை அமைக்கப்பட உள்ளது.

விதை விதைக்கும் பணியை தவிர, மற்ற பணிகளான நீர் பாய்ச்சுதல் தொடங்கி அறுவடை பணிகள் வரை ரோபோக்களே செய்துவிடும்.

மற்ற விவசாய பண்ணைகளுடன் ஒப்பிடுகையில், இந்த ரோபோ விவசாய பண்ணையின் மூலமாக, பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ள கீரை வகைகளை ரசாயன கலப்பின்றி அறுவடை செய்யலாம்.

2017ம் ஆண்டின் பிற்பகுதி முதல் இந்த ரோபோ விவசாய பண்ணை, தனது செயல்பாட்டை துவக்க உள்ளது!

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *