மதிப்பூட்டல் மூலம் லாபம்!

மதிப்புக் கூட்டல் தொழில், அதற்கான பயிற்சி குறித்து கூறும், தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் இயங்கி வரும், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர், முனைவர், அனந்த ராமகிருஷ்ணன் கூறுகிறார்:

  • விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய கருவிகளை கண்டுபிடிப்பதுடன், தொழில் முனைவோருக்கு தேவையான மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்களையும், நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம்.
  • தொழில் முனைவர்களை விட விவசாயிகள், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டினால், நல்ல லாபம் பார்க்கலாம். மதிப்புக் கூட்டல் சம்பந்தமான விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, ஒரு நாள் பயிற்சி நடத்துகிறோம். பல்வேறு கட்டணப் பயிற்சிகளும் இங்கு தரப்படுகின்றன.
  • மேலும், மதிப்புக் கூட்டல் தொழிலை உடனே துவக்கும் வகை யில், பல நுட்பங்களையும் சொல்லி தருகிறோம்.உதாரணமாக, தக்காளி விலை குறையும் போது, விவசாயிகள் பலர், சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர்.
  • தக்காளி விலை குறையும்போது, எங்களிடம் தெரிவித்தால், விவசாயிகளுடைய இடத்திலேயே மிஷினை கொண்டு வந்து, மதிப்புக் கூட்டல் செய்து கொடுக்கிறோம்.
  • விவசாயிகள் எங்களிடம் பொருளை ஒப்படைத்தால், விற்பனையும் செய்து தருகிறோம்.
  • எங்களிடம் பயிற்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் மதிப்புக் கூட்டல் தொழிலை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு, தொழில் துவங்க ஏற்பாடு செய்து தருகிறோம்.
  • அதிகபட்சமாக, 35 சதவீத மானியத்துடன், ஐந்து கோடி ரூபாய் வரை கடன் பெற்றுத் தருகிறோம்.இவை தவிர, நாங்களே பொருளுக்கான சந்தை வாய்ப்பையும் அமைத்துக் கொடுக்கிறோம்.
  • மதிப்புக் கூட்டலில் இன்று இருக்கும் சவால், சந்தை வாய்ப்பு தான். உதாரணமாக, பாலில் இருந்து, 15க்கும் மேற்பட்ட பொருட்களை தயார் செய்ய முடியும்.விவசாயிகளிடம் இருந்து வாங்கி, விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
  • மேலும், மதிப்புக் கூட்டலில் முக்கியமானது தரம். அதை முழுமையாக கையாள்வதில் தான், மதிப்புக் கூட்டல் தொழிலின் வெற்றி ரகசியமே, அடங்கி இருக்கிறது.
  • தொழில் முனைவருக்கான வாய்ப்புகளையும், உருவாக்கிக் கொடுக்கிறோம்.மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த, 2017 – 20ம் ஆண்டு வரை, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
  • இந்த நிதி மூலம், விளை பொருட்களைப் பாதுகாக்கும் குளிர்ப்பதன நிலையத்தை உருவாக்க, 40 சதவீத மானியமும், உணவைப் பதப்படுத்தும் தொழில்களுக்கு, 30 சதவீத மானியமும் வழங்கப்படும்.
  • இதுபோன்ற திட்டங்கள், பயிற்சிகள் குறித்த விபரங்கள் தேவைப்படும் விவசாயிகளும், தொழில் முனைவோரும், எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகலாம்.

தொடர்புக்கு: 9480442807 .


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *