வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவி

அரசு வேளாண் துறை, வேளாண் பொறியியல் பணிமனை ஆகியவை சார்பில் மதகடிப்பட்டில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் வியாழக்கிழமை வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவியின் செயல் விளக்க முகாம் நடைபெற்றது.
இமாலயா அக்ரோ-டெக் நிறுவனம் மூலம் வேளாண் துறை இயக்குநர் அ.ராமமூர்த்தி, இணை இயக்குநர் த.சோமலிங்கம், துணை இயக்குநர் க.மதி, துணை வேளாண் இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான விவசாயிகள் முன்னிலையில் இந்த செயல் விளக்கம் நடைபெற்றது.
கருவியின் சிறப்பம்சங்கள்:

  • காய்ந்த மற்றும் ஈரமான வேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் திறன்கொண்ட இக்கருவியைக் கொண்டு தென்னை, வாழை, மரவள்ளி, பப்பாளி, முருங்கை மற்றும் இன்னும் பிற வேளாண் கழிவுகளைப் பொடியாக்கலாம்.
  • இதன் மூலம் வேளாண் கழிவுகளை விரைவாக மக்க வைத்து, இயற்கை உரத்தை எளிதில் தயாரிக்க முடியும்.
  • பொடிக்கப்பட்ட வேளாண் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து, மண் வளத்தை மேம்படுத்த முடியும்.
  •  மேலும், இது நிலப்பரப்பை போர்வையைப் போல் மூடி நீர் ஆவியாதலை தடுத்து, மண்ணின் ஈரப்பதத்தைக் காப்பதுடன், நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
  • வேளாண் கழிவுகளை அப்புறப்படுத்த ஆகும் செலவீனத்தை பெருமளவில் குறைப்பதுடன் நிலத்தைச் சுத்தமாக வைக்கவும் உதவுகிறது.
  • கழிவுகளை எரித்து வீணாக்காமல், விரைந்து உரமாக மட்கச் செய்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்கலாம்.
  • இந்தக் கருவியை டிராக்டரைக் கொண்டு இயக்குவதால், நிலத்தின் அனைத்துப் பகுதிக்கும் பொடியாக்கப்பட்ட கழிவுகளை எளிதில் பரப்பலாம்.
  • இந்தக் கருவியின் விலை ரூ. 90,000 ஆகும். இவற்றுடன் 5 சதவீதம் கூடுதல் மதிப்பீடு வரியாக ரூ. 4,500 மற்றும் கருவியை கொண்டு சேர்ப்பிக்க ஆகும் போக்குவரத்து செலவு ரூ. 3,000 என மொத்தம் ரூ. 97,500 ஆகும. அடக்க விலை ரூ. 90,000-ல் 50 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படும்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

Himalaya Agrotech , 21,Mayura Gardens , Kurumbapalayam (Post), Coimbatore-641107, Tamil Nadu.
Mobile : 08754012813 , 08754022813 .

E-mail : himalayaagrotech0220@gmail.com

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *