இனி வாஷிங் மெஷினுக்கு வேலையில்லை!

வாஷிங்மெஷினுக்கு இனி வேலை இருக்கப் போவதில்லை. வாஷிங்மெஷின் வேலையை இனி டோல்ஃபி என்ற சிறிய கருவியே செய்துவிடப் போகிறது. ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது.

ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் சேர்த்து, அழுக்குத் துணிகளை போட்டு விட வேண்டும். டோல்ஃபியை ஆன் செய்து வாளியில் வைத்து விட வேண்டும். டோல்ஃபியில் இருந்து சக்தி வாய்ந்த அல்ட்ராசோனிக் அலைகள் உருவாகி, குமிழ்களை ஏற்படுத்தும். துணிகளில் உள்ள அழுக்குகள் மாயமாகும். அரை மணி நேரத்தில் துணிகளைத் துவைத்துக் கொடுத்துவிடும். கையடக்கமான இந்த டோல்ஃபியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

வாஷிங்மெஷினை விட துணிகளை மிக மென்மையாகக் கையாளும் டோல்ஃபி. பருத்தி, பட்டு, பாலியெஸ்டர் என்று எந்த வகையான துணிகளையும் சுத்தம் செய்து கொடுத்துவிடும்.

வாஷிங்மெஷினை விட 80 சதவிகிதம் குறைவான ஆற்றலில் டோல்ஃபி இயங்குவதால், சத்தமே வெளியே வராது. Ecofriendly மஷின் தான்!

Courtesy: Hindu
Courtesy: Hindu

ஜெர்மனைச் சேர்ந்த தொழிலதிபர் லெனா சோலிஸ் இதை உருவாக்கியிருக்கிறார். ’’வெளியிடங்களுக்குச் செல்லும்போது துணிகளைத் துவைப்பது கடினமான விஷயமாக இருந்தது.

dolfi1

இதற்கு ஏதாவது ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அல்ட்ராசவுண்ட் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்தேன். அல்ட்ராசோனிக் அலைகளை வைத்து துணி துவைக்கும் முயற்சியை உருவாக்கிவிட்டேன்.

dolfi2

டோல்ஃபியை எடுத்துச் சென்றால் சலவைக்குச் செலவு செய்யும் பணம், நேரம் மிச்சமாகும். துணி துவைப்பதே சந்தோஷமான விஷயமாக மாறிவிடும். கடந்த ஜனவரியில் திட்டத்தை ஆரம்பித்தோம். விரைவில் விற்பனை செய்ய இருக்கிறோம். ஒரு டோல்ஃபி 7,300 ரூபாய்’’ என்கிறார் லெனா சோலிஸ்.

dolfi3

மேலும் விவரங்கள் அறிய – http://www.dolfi.co/


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *