கற்றாழையில் இருந்து leather

நாடு முழுவதும் தோல் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ள நிலையில், இரண்டு இளைஞர்கள்  கற்றாழையிலிருந்து ‘தோல்’ n உருவாக்கி சாதனை படைத்து உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக, தோலுக்காகவும், ஃபேஷனுக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் உயிர்வாழும் நிலை உருவாகி உள்ளது.

விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிப்படும் பல்வேறு வகையான  ஆடம்பர பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோதமாக விலங்குகள் வேட்டையாடப்படும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. தோல் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் பீட்டா உள்பட பல்வேறு சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. மேலும் தோல் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் , அட்ரியானோ டி மார்டி என்ற நிறுவனம்,  டெசர்டோ எனப்படும் கற்றாழை இலைகளைப் பயன்படுத்தி தோலைப் போன்றே  துணியை உருவாக்க ஒரு புதிய நுட்பத்தை வகுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான  அட்ரியன் லோபஸ் வெலார்டே மற்றும் மார்ட்டே செசரெஸ் ஆகிய இளைஞர்கள் இதை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிக தண்ணீரை உட்கொள்ளாமல், குறைந்தபட்ச ஈரப்பதத்துடன் பாலைவனத்தில்  வளரக்கூடிய கற்றாழையானது,  கடினமான தாகவும், அடத்தியானது மற்றும் அபாயகரமானதும் ஆகும். இந்த  கற்றாழையைக் கொண்டு தோலைப்போன்றே துணி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு அட்ரியானோ டி மார்டி என்ற நிறுவனம் வெற்றி கண்டுள்ளது.

கற்றாழையை முழுமையாக பதப்படுத்தப்படும்போது, ​​அது உண்மையான தோல் போல உணர்வை ஏற்படுத்துவதாகவும், அத்துடன்  தோல் பதப்படுத்துவதற்கு பயன்படும் இயற்கையான சாயங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்படும் தோலைப் போன்ற பொருட்கள்  சுற்றுச்சூழலை உண்மையில் பாதிக்காது, என்றும், உங்களுக்கு ஏற்றவாறு பல வண்ணங்களில் கிடைக்கும், சுமார் 10 ஆண்டுகாலம்  ஆயுள் உள்ள இந்த  துணியானது மக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்து உள்ளது.

பார்ப்பதற்கு விலங்குகளின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட பொருட்களைப் போலவே காணப்படும், கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பொருளும்,  உண்மையான தோலுக்கு உரிய விலையும்  சமமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள நிறுவனம், இதனைக் கொண்டு, கார் இருக்கைகள், பைகள், பர்ஸ்கள், காலணிகள் மற்றும் ஆடைகளை கூட உருவாக்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.

அட்ரியன் லோபஸ் வெலார்டே மற்றும் மார்ட்டே செசரெஸ், ஆகிய இரு இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

உலகளாவிய தோல் தொழிலுக்ககாக ஆண்டு ஒன்றுக்கு,   ஒரு பில்லியனுக்கும் அதிகமான விலங்குகளை கொல்லப்பட்டு வருவது மட்டும் இல்லாமல், தோல் பொருள் உருவாக்க பயன் படுத்தப்படும் ரசாயனங்களும் தடுக்க படலாம்!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *