கொரோனா காலங்களில் எந்த ஒரு கடைக்கு சென்றாலும் ஒரு தெர்மோமீட்டர் மூலம் உடலில் ஜுரம் உள்ளதா என்று கண்காணிக்கின்றனர். முதலில் ஒரு நாள் தற்செயலாக பார்த்தேன் – என் ரீடிங் 96.5F இருந்தது. ஏதோ சரி தெர்மோமீட்டர் சரி இல்லை என்று நினைத்தேன். ஆனால், பல இடங்களில் என் ரீடிங் 97F தாண்டவே இல்லை
நாம் பள்ளிக்கூடங்களில் 98.6F தான் சரியான உடல் நிலை என்று. சரி ஏதோ சரி இல்லை என்று கூகுளை பண்ணி பார்த்ததில் புது உண்மை வெளி ஆனது!
1851 ஆண்டில் கார்ல் ரெய்னஹோல்டு என்பவர் தெர்மோமீட்டரை கண்டு பிடித்தார். அவர் 10 தடவை 25000 பேர்களிடம் ரீடிங் எடுத்து, சராசரியாக மனிதன் தட்பம் 98.6F என்று அறிவித்தார். இதே வேத வாக்காக எல்லாரும் எடுத்து கொள்ளப்பட்டது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் எடுத்த ரீடிங்கள் 1-2 டிகிரி குறைவாகவே இருக்கின்றன. பல ஆண்டுகளில் சேகரித்த பதிவுகளில் இருந்து, மனிதனின் சராசரி தட்பம் 100 ஆண்டுகளில் 1.5F குறைந்து உள்ளது தெரிந்து உள்ளது.
இதை தவிர, கடந்த சில ஆண்டுகளில் குறைவின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. இப்போது, 10 ஆண்டுகளில் 0.05F குறைந்து வருகிறது. இதற்க்கான காரணங்கள் தெரிய வில்லை. வழக்கம் போல் உலகம் சூடு ஆகி வருவதால் இப்படி பட்ட மாற்றம் என்று சொல்ல படுகிறது!
Humans are becoming cool!
நன்றி:Indian Express
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Really interesting..of course a kind of fear also comes to mind..