சக்கரவர்த்தி பெங்குயின்

பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும்.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. உணவுக்காக பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜெண்டினா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

பெங்குயின்களின் முக்கிய உணவு மீன்கள்.

பெங்குயின் வகைகளில் மிகப் பெரியது சக்கரவர்த்தி பெங்குயின் எனப்படும் ‘எம்பரர் பெங்குயின்’. ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமும் 35 கிலோகிராம் எடையும் உள்ளவை.

பெங்குயின்களில் சிறியது, நீலப் பெங்குயின். இதன் உயரம் 40 சென்டிமீட்டர். ஒரு கிலோகிராம் எடை.

கடல் நீரைக் குடித்து பெங்குயின்களால் வாழமுடியும்.

வாழ்நாளின் பாதியை நீரிலும், பாதியை நிலத்திலும் செலவழிக்கின்றன.

பொதுவாகப் பெரிய பென்குயின்கள், வெப்பத்தை உடலில் தக்கவைக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன. அதனால் அதிக குளிர்ப் பகுதிகளிலும் அவற்றால் வாழமுடியும். சிறிய பெங்குயின்களால் அதிக குளிர் நிலவும் பகுதிகளில் வாழமுடியாது.

நியூசிலாந்தைச் சேர்ந்த மஞ்சள் கண் பெங்குயின்கள் அரிதாகி வருகின்றன. தற்போது அவற்றின் எண்ணிக்கை சுமார் 4000 மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெங்குயினின் கறுப்பு முதுகும், வெள்ளை வயிறும் நீந்தும்போது குழப்பத்தை ஏற்படுத்தும். அவை நீந்தும்போது, மேலிருந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது. தண்ணீருக்குக் கீழே இருந்து, சூரிய ஒளி பிரதிபலித்து அதன் வெள்ளை வயிறை மறைத்து விடும்.

பெங்குயின்களுக்கு அன்டார்டிகா கண்டத்தில் ஆபத்து கிடையாது. ஏனெனில் அங்கு பெங்குயின்களை வேட்டையாடும் விலங்குகள் கிடையாது.ஆனால் இந்த சக்கரவர்த்திக்கு இப்போது பிரச்னை வந்து உள்ளது.
பூமி வெப்ப மயமாதல் காரணமாக அண்டார்டிக்கா சிறிது சிறிதாக உருக துவங்கினால் இந்த அழகான பறவைகள் பூமியில் இருந்து மறைய சாத்தியகூறுகள் இருக்கின்றன

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *