புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்

காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை – ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களைப் பார்த்து பலரும் வியக்கின்றனர். அரிய வகை மரங்களைப் பார்வையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி உருவானது இந்த சுகவனம்? மக்கள் விவசாய பண்ணையின் நிறுவனர் – செயலாளரான மரியசெல்வம் விவரிக்கிறார்…

உணவு உற்பத்திக்கான செயல் திட்ட (Action For Food Production) அமைப்பிலிருந்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நீர் வடிபகுதி திட்டத்தை செயலாக்கும் பொறுப்பை 1990-ல் எங்களது மக்கள் விவசாய பண்ணையிடம் ஒப்படைத்தனர். தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 அமைப்புகளுக்கு இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. இதற்காக புதுக்கோட்டையில் 300 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து, அதில் மழைநீர் சேகரிப்பு, மண் அரிப்பைத் தடுத்தல், இயற்கை விவசாயம் உள்ளிட்ட திட்டங்களை விவசாயிகளுடன் இணைந்து செயல்படுத்தினோம். அந்த 300 ஏக்கரில் விவசாயிகள் மற்றும் வனத்துறையின் நிலமும் எங்களுக்குச் சொந்தமான 9 ஏக்கரும் இருந்தது.

எங்களுடைய மழைநீர் சேகரிப்புத் திட்ட அமைப்புதான் தமிழக அரசு அமல்படுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத் துக்கான முன்மாதிரி. 1996-ல் நாங்கள் இந்தத் திட்டத்தை முடித்து வெளியே றியபோது, எங்களின் 9 ஏக்கர் நிலத்தில் வளர்ந்து கிடந்த மரங்களையும் மூலிகைச் செடிகளையும் அப்படியே பேணிக் காப்பது என்று முடிவெடுத்தோம். அதுதான் இப்போது சுகவனமான வளர்ந்து நிற்கிறது.

இன்றைக்கு பல இடங்களில் இயற்கை காடுகளை அழித்து யூகலிப்டஸ் காடு களை செயற்கையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வரும் கேடுகளைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

சுகவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத் துக்கே உரித்தான 350 வகையான மரங்கள் மற்றும் இயற்கையான மூலிகை தாவரங்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறோம்.

அதுமட்டுமில்லாமல், புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிக ளில் இருந்தும் சில தாவர வகைகளை கொண்டு வந்து நட்டுவைத்திருக்கிறோம். இதையும் சேர்த்தால் பொருளாதாரம், சுற்றுபுறச் சூழல், மருந்துத் தாவரங்கள் என மொத்தம் 500 வகையான தாவரங்கள் இருக்கின்றன. இதனால், சுகவனம் இப்போது மூலிகை பாதுகாப்புச் சுகவனமாக மாறி இருக்கிறது.

இங்குள்ள மூலிகைச் செடிகளையும் அரிய வகை மரங்களையும் பார்வையி டுவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமாய் வருகிறார்கள். எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து, 150 பள்ளிகளில் மூலிகை பயன் பாடு குறித்து மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அங்கே மூலிகை தோட்டம் அமைப்பதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறோம். காடுகளை அழிப்பது மிக மிக எளிது. ஆனால், ஒரு காட்டை உரு வாக்க குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. நாடே இப்போது இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.

அரிய மூலிகைகள், சுற்றுப்புறச் சூழல் இவைகளின் அவசியத்தை மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும், இளம் தலைமுறையினரிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதை உண்டாக்கு வதுதான் எங்களது நோக்கம் என்கிறார் மரியசெல்வம்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “புதுக்கோட்டை அருகே ஒரு இயற்கை சுகவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *