பூகம்பங்கள், நில அதிர்வுகள் மூலம் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பல உயிர்கள் பலி ஆகின்றன.
பூகம்பங்கள் வருவதை முன்னவே அறிய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இப்போது ஜெர்மனியில் ஒரு ஆய்வு மூலம், மிருகங்களுக்கு பூகம்பம் வருவதற்கு முன்பே அவற்றுக்கு தெரிகிறது என்று நிரூபிக்க பட்டுள்ளது.
இத்தாலியில் நில நடுக்கம் அதிகம் வரும் இடங்களில் ஆடு மாடு மற்றும் நாய் பூனை ஆகியவற்றை சென்சார் மூலம் ஆராய்ச்சி செய்தலில்,பூகம்பம் 2வருவதற்கு 20 மணி முன்பே restless ஆகின்றன என்று தெரிகிறது.
சுதந்தரமாக உள்ள மிருகங்கள், பாதுபாப்பான இடத்திற்கு நகர்ந்து போகின்றன. வீட்டில் உள்ள பூனை நாய் போன்றவை அங்கும் இங்கும் நடந்து டென்ஷனாகி உள்ளன என்று தெரிந்தது.
மிருகங்கள், தன்னுடைய மயிர்கால்கள் மூலம் மிக சிறிய அதிர்வுகளை தெரிந்து கொள்கின்றன. மேலும், பூமிக்குள்ளே உள்ள குவார்ட்ஸ் மண் நகர்வது காரணமாக வெளி வரும் சிறிய அளவு வாயுக்களை முகர்கின்றன என்று தெரிகிறது
சுனாமி வந்த பொது அந்தமானில் ஒரு மிருகம் கூட சாகவில்லை என்று கண்டறியப்பட்டது.
ஜேர்மன் பல்கலை கழகம் இப்போது பூகம்பம் வர சாத்தியமுள்ள இடங்களில் சென்சார் பொருத்தப்பட்ட ஆடு மாடுகளை இருக்க வைத்து, அவற்றின் மூலம் வரும் சிக்னல் மூலம் பூகம்பம் வருவதை முன் கூட்டியே கண்டுபிடிக்க பெரிய அளவில் முயற்சி செய்ய போகிறது.
நன்றி: டோவ்ன் டு எர்த்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்