Bar-tailed Godwit என்ற பறவை, நம் ஊரில் உள்ள பல நீர் பறவை போன்றே பார்ப்பதற்கு இருக்கும். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் வாழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க இவை பசிபிக் மகா சமுத்திரம் மீது பறந்து நியூ ஸிலண்ட் செல்கின்றன.
இதில் என்ன ஒவ்வொரு ஆண்டும் தான் பறவைகள் குளிர் தேசங்களில் இருந்து நம் நாட்டுக்கு வருகின்றன என்கிறீர்களா ?
ஒரு Bar-tailed Godwit காலில் GPS கருவி கட்டி அது எப்படி பறக்கிறது என்று கண்டு பிடித்தனர்.
அந்த பறவை, 13000 கிலோமீட்டர் எந்த ஒரு இடத்திலும் நிற்காமல் 239 மணி நேரம் பறந்து உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 10 நாட்கள் நிற்காமல் உணவு கொள்ளாமல் இறக்கைகளை இயக்கி பறந்து உள்ளது
1 மணி நேரம் ஜாக் பண்ணவே நமக்கு எல்லாம் இரண்டு முறை நீர் குடிக்கணும், ரெஸ்ட் எடுத்து கொள்ளணும்!
இயற்கையின் அதிசயங்கள் இன்றும் நாம் கண்டு பிடித்து கொண்டு இருக்கிறோம்
Courtesy: Bird count india
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்