நாதஸ்வரம் மங்கள வாத்தியம். எல்லா கோவில்களிலும், திருமணங்களிலும் நிச்சியம் இருந்து வந்த ஒன்று.
இந்த வாத்தியத்தை கற்பது நீண்ட காலம் ஆகும். காலத்தின் சுழற்சியால் இதன் பயன்பாடு குறைந்து வருகிறது. கற்று கொடுப்பவர்கள் குறைந்து விட்டதால் இவற்றை செய்பவர்கள் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள ஊர் நரசிங்கம்பேட்டை. இங்கே 4 குடும்பங்கள் நாதஸ்வரம் செய்கின்றனர். இவர்கள் 5 தலைமுறையாக இந்த கலையை விடாமல் செய்து வருகின்றனர்.
காலை 10 மணிக்கு செல்வராஜ், 53 வயதான 4ஆம் தலைமுறை நாதஸ்வரம் கலைஞர் தன்னுடைய சிறிய workshop வருகிறார். இரும்பு கருவிகளை பூஜை அறையில் இருந்து எடுத்து அன்றைய வேலையை தொடங்குகிறார்.
“நாதஸ்வரம் மங்கள வாத்தியம். என் கொள்ளு தாத்தா கோவிந்தசாமி ஆச்சாரி மாயவரம் அருகே வாழ்ந்த ஒரு கலைஞரிடம் இதை கற்று கொண்டு வந்தார்.1955இல் என் அப்பா ரங்கநாதன் ஆச்சாரி சிறிது மாற்றங்களை செய்து வந்தார்.
“நாதஸ்வரங்கள் அச்சா மரங்களில் இருந்து செய்யப்படுகின்றன. இவை 75 ஆண்டு மரங்களாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் வீடுகளுக்கு தூண்களாக இருந்த மரங்கள் இவை. என்கிறார், தன வீட்டில் பின் புறத்தில் இடப்பட்டுள்ள மரங்களை காண்பித்து.
” ஒரு நாதஸ்வரம் செய்ய 3 பேர் தேவை. எல்லா செலவுகளையும் தாண்டி ஒரு நாதஸ்வரத்திற்கு ரூ 1500 கிட்டினால் பெரிது”
“இதை வாசிக்கும் வித்துவான்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். வெளிநாடுகள் சென்று கச்சேரி செய்கின்றனர். ஆனால் எங்களிடம் தள்ளுபடி கேட்கின்றனர்”
“அரசு வாசிப்போரக்கு பரிசுகளையும் கலைமணி விருதுகளையும் கொடுக்கின்றன. எங்களை கண்டு கொள்வதில்லை”
அடுத்த தலைமுறையில் ஒரு மகன் பொறியியல் படிக்கிறான். இன்னொருவன் வேறு வேலைக்கு சென்று விட்டான். ஒரு பேரன் சபரி நாதஸ்வரம் செய்வதில் சிறிது ஆர்வம் கொண்டுள்ளான்.
காலம் செய்த மாறுதல்களில், இப்படி பல தலைமுறைகைகளாக உள்ள கலைகள் அழியும் அபாயத்தில் உள்ளன.
நம் தலைமுறை தமிழ் பண்பாட்டின் அடையாளமான நாதஸ்வரத்தை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது நம் பொறுப்பு.
பண்பாடு என்பது ரிலே ரேஸ் மாதிரி. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு baton கொடுக்காவிட்டால் ரேஸ் கிளோஸ்.
Courtesy: PARI
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்