ஆமணக்கு சாகுபடி

அழகு சாதனங்கள் உற்பத்திக்கு பயன்படும் ஆமணக்கு சாகுபடியில் கோபி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 • கோபி வட்டாரத்தில் வாய்க்கால் பாசனப்பகுதியை தவிர்த்து, கிணற்று பாசனம் மற்றும் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன.
 • மானாவாரியில் நிலக்கடலை, கொள்ளு, எள், சோளப்பயிர் போன்றவை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
 • கோபி, நம்பியூர், கொளப்பலூர், கெட்டிசெவியூர், பள்ளிபாளையம், சிறுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரியில் நிலக்கடலை, கொள்ளு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 • நிலக்கடலை, கொள்ளுச் செடியில் ஊடுபயிராகவும், கலப்பு பயிராகவும் ஆமணக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை, கொள்ளு ஆகியவை 100 நாட்கள் பயிர்.
 • ஆமணக்கு செடிகள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது. ஆமணக்கு கொட்டைகள் அழகு சாதனப் பொருள் உற்பத்திக்கும், சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
 • இதனால், ஆமணக்கு விதைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கோபி சுற்று வட்டார விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர்.

கோபி வட்டார வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு ஆசைத்தம்பி கூறியதாவது:

 • கோபி வட்டாரத்தில் மானாவாரியில், 200 ஏக்கரில் ஆமணக்கு ஊடுபயிராகவும், கலப்பு பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. டி.எம்.வி., 4, 5, 6 ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. டி.எம்.வி.,- 6 ரகம் ஆறு மாத பயிராகும். டி.எம்.வி., 4, 5 ஆகியவை நான்கு மாதப் பயிர்.
 • ஒரு ஏக்கரில் ஆமணக்கு கலப்பு பயிராக சாகுபடி செய்து இருந்ததால் 200 முதல் 500 கிலோ வரை கிடைக்கும்.
 • ஒரு கிலோ ஆமணக்கு 40 ரூபாய் என விற்பனை செய்தால், ஏக்கருக்கு 8,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் லாபம் பெற முடியும்.
 • ஆமணக்கு செடியை பொறுத்தவரை கடும் வறட்சியிலும் பசுமையாக வளரக் கூடிய தன்மை கொண்டது.
 • ஆமணக்கு பயிரிட்டால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
 • கோபி வட்டார விவசாயிகள் எள்ளு, கொள்ளு, நிலக்கடலை போன்ற பயிர்களுடன் ஊடுபயிராக ஆமணக்கு பயிர் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *