அஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 2

அஸ்பெஸ்டாஸ் என்பது இயற்கையில் கிடைக்கும் நாரிழை. இதில் மூன்று வகை உள்ளன. நீல அஸ்பெஸ்டாஸ் – crocidolite, பிரவுன் அஸ்பெஸ்டாஸ் – amosite மற்றும் வெள்ளை அஸ்பெஸ்டாஸ் – chrysotile எனப்படும்.

இவை மூன்றுமே மனிதன் மற்றும் விலங்குகளுக்கு கான்செர்  காரணி (Carcinogenic) என்று  நிருபிக்க பட்டு உள்ளது.

அஸ்பெஸ்டாஸ் நாரியழை மூலம் பின்ன பட்ட நெருப்பு எதிர்ப்பு  திறன் கொண்ட glove நன்றி: Wikipedia
அஸ்பெஸ்டாஸ் நாரியழை மூலம் பின்ன பட்ட நெருப்பு எதிர்ப்பு திறன் கொண்ட glove நன்றி: Wikipedia

இந்தியாவில் விற்க படும் அஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரும்பாலும் வெள்ளை அஸ்பெஸ்டாஸ் chrysotile மூலம் தயாரிக்க பட்டவை. இந்த வகை அஸ்பெஸ்டாஸ் நாரிழைகள் சிமெண்ட் கலந்து இப்படி கூரை வடிவில் விற்க படுகின்றன

இந்த நாரிழை பற்றி தெரிந்து கொள்வோமா?

இந்த நாரிழைகள் சுவாசம் மூலம் நுரையீரலில் போய் தங்குகின்றன. இவை மிகவும் சிறியன (5 மைக்ரோன் அளவு – பாக்டீரியா விட சிறியது ). சிறிது காலம் பின்பு அங்கே கான்செர் ஆரம்பிக்கறது. அஸ்பெஸ்டாஸ் நாரிழை மூலம் வரும் நோய்கள் என்று Asbestosis, Lung cancer என்று நிரூபிக்க பட்டு உள்ளது.

இயற்கையாக கிடைக்கும் அஸ்பெஸ்டாஸ் - நார் இழைகளை பார்க்கலாம் - நன்றி:  Wikipedia
இயற்கையாக கிடைக்கும் அஸ்பெஸ்டாஸ் – நார் இழைகளை பார்க்கலாம் – நன்றி: Wikipedia

இதனால்,  உலகில் 50 நாடுகளில் அஸ்பெஸ்டாஸ் தடை செய்ய பட்டு உள்ளது.

புதிய அஸ்பெஸ்டாஸ் சுரங்கங்கள் திறக்க படவில்லை. உலகில் பல நாடுகளில் பழைய அஸ்பெஸ்டாஸ் கூரைகளை ஜாக்கிரதையாக பிரித்து எடுத்து மனித நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்து செல்கின்றனர் (safe disposal of hazardous material).

நம் நாட்டில் அஸ்பெஸ்டாஸ் நிலை என்ன மற்றும் எப்படி அஸ்பெஸ்டாஸ் தீமைகளில் இருந்து தப்பிக்கலாம் என்று  பார்ப்போமா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *