‘கார்பைட்’ கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் கண்டறிவது எப்படி?

‘கார்பைட்’ கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், உடல்நல பாதிப்பை உண்டாக்கும் என்பதால், பழங்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டுமென, உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், ரோட்டோரங்களில், மலைபோல மாம்பழங்கள் குவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

கொள்ளை லாபத்துக்கு ஆசைப்படும் வியாபாரிகள், காய்களை அதிக அளவில் கொள்முதல் செய்து, அவற்றை ‘கார்பைட்’ கற்கள் வைத்து பழுக்க வைக்கின்றனர்.

இவ்வாறு, பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், கடுமையான உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது:

  • இயற்கையாகவே மாம்பழம் பழுக்கும் போது, அதன் புளிப்புத்தன்மை குறைந்து, இனிப்பு சுவை அதிகரிக்கும். இதற்கு எத்திலீன் வாயு முக்கிய காரணமாகும்.
  • ஆனால், கால்சியம் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கும்போது, ஆபத்தான ‘அசிடிலீன்’ வாயு உற்பத்தியாகிறது.
  • மாம்பழங்கள் செயற்கையாக, அவை பழுத்ததுபோல் நிறமாற்றம் செய்கிறது.
  • இப்பழங்கள், மிகவும் மென்மையாகவும், சுவை குறைந்ததாகவும் இருக்கும்.
  • வெளிப்புறத்தில் கவர்ச்சிகரமாக ஒரே மாதிரியான நிறம் கொண்டிருக்கும்.
  • இப்பழங்களை தலைவலி, மயக்கம், துாக்கம், மனக்குழப்பம், தொந்தரவு, ஞாபகமறதி, மூளையில் வீக்கம், வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
  • மாம்பழங்களின் மேற்புறம் சீரான நிறம் இருந்தால் அது செயற்கையாக பழுத்தது என கண்டறியலாம்.
  • எனவே, மாம்பழங்களை வாங்கும்போது கவனமாக தேர்வு செய்து வாங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *