‘சாக்கடை கழிவுநீரால் சாகுபடி செய்யப்படும் கீரையை உட்கொண்டால், உடல் நலத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படும்’ என, ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
சாக்கடை கழிவுநீரை பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் கீரை சாகுபடி செய்யப்படுகிறது. அவை, சந்தையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
‘தொழிற்சாலை கழிவுநீரால் சாகுபடி செய்யப்பட்ட கீரையை உட்கொண்டால், உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும்’ என்கின்றனர், ஆய்வாளர்கள்.
இது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆய்வாளர் பேராசிரியர் பரணி கூறியதாவது:
- சாக்கடை கழிவுநீர் மூலம் சாகுபடி செய்யப்படும் கீரைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆராய்ச்சி கட்டுரையை, 2002ல் சமர்ப்பித்து உள்ளேன்.
- கோவையில், தொழில் நிறுவனங்களிலிருந்து வெளியேறிய கழிவுகள் குளங்களில் கலக்கின்றன.
- இதில் நிறைந்துள்ள நிக்கல் உலோகம், கீரையுடன் கலந்து, மனிதர்களின் உடல்களிலும் நச்சுத்தன்மையின் அளவை கூட்டுகிறது.
- மனித உடலில், ஒரு லிட்டருக்கு, 0.05 மி.கிராம் அளவிற்கே நிக்கல் இருக்கலாம்.
- அதற்கு அதிகமாக சேர்ந்தால், நுரையீரல் புற்றுநோய், நரம்பு சார்ந்த நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்