நீங்கள் வாங்கும் குடிநீரில் பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியுமா?

ஒரேயொரு குடிநீர் பாட்டிலில் டஜன் கணக்கில், ஏன் – ஆயிரக்கணக்கில்கூட பிளாஸ்டிக் துகள்கள் கலந் திருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. கண்ணுக்குத் தெரியும் அல்லது நாக்கில் தட்டுப்படும் துகள்களை நாமே எடுத்துவிடுவோம் அல்லது துப்பிவிடுவோம். இது கண்ணுக்குத் தெரியாமல் – ஆனால் நீருடன் சேர்ந்து நெஞ்சு வழியாக உள்ளே செல்கிற மிகவும் நுண்ணிய துகள்களைப் பற்றியது.

வாஷிங்டனைச் சேர்ந்த ‘ஆர்ப் மீடியா’ என்ற லாப நோக்கமற்ற பத்திரிகையாளர் அமைப்பு, இதைக் கண்டறிய முயற்சிகளை எடுத்தது. ஐந்து கண்டங்களின் ஒன்பது நாடுகளில், 19 வெவ்வேறு இடங்களிலிருந்து மொத்தம் 250 பாட்டில்களில் நீர் எடுத்துவந்து சோதிக்கப்பட்டது. உலக அளவில் பிரபலமான நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்கள் விற்கும் பாட்டில் குடிநீரும் இதில் அடக்கம். இந்த நீரில் பாலிபுரோபிலின், பாலி தைலின், டெரப்தலேட் ஆகிய துகள்கள் இருந்தன. ஒரு பாட்டிலில் 10,000-க்கும் மேற்பட்ட துகள்கள் கிடைத்தன. சோதிக்கப்பட்ட பாட்டில்களில், 93%-ல் துகள்கள் இருந்தது அதிர்ச்சிகரமாக இருந்தது.

மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் தங்களுடைய தண்ணீரில் இருப்பதை இரண்டு பெரிய தண்ணீர் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், ‘ஆர்ப் மீடியா’ கூறுவது மிகைப்படுத்தப்பட்டவை என்று நிரா கரித்தன. பிளாஸ்டிக் துகள்கள் 100 மைக்ரான் அல்லது 0.10 மில்லிமீட்டர் அளவில் கலந்திருந்தன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காததால், பாட்டிலிலும் பவுச்சுகளி லும் விற்கப்படும் குடிநீரைத்தான் நம்பியிருக்கிறார்கள் 201 கோடி மக்கள். அசுத்தமான நீரால் ஏற்படும் நோய் களுக்கு அன்றாடம் 4,000 குழந்தைகள் உலகம் முழுக் கப் பலியாகின்றன என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

குடிநீரில் மட்டும்தான் என்றில்லை, பெருங்கடல் களிலும் மண்ணிலும் காற்றிலும் ஏரிகளிலும் ஆறுகளிலும்கூட நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிட்டன. இவை 5 மில்லிமீட்டருக்கும் குறைவானவை. இந்த பிளாஸ்டிக் துகள்கள் அனைத்தும் இறுதியில் சங்கமமாவது எங்கே தெரியுமா.. மனித உடல்களில்! உலக அளவில் குழாய்த் தண்ணீரிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை ஆர்ப் மீடியா, கடந்த ஆண்டு இதே போன்றதொரு ஆய்வில் கண்டுபிடித்தது.

குடிநீர் வழியாக நம்முடைய உடலில் கலக்கும் பிளாஸ்டிக் நுண்துகள்களில் 90% கழிவுடன் கலந்து வெளியே வந்துவிடும். எஞ்சிய 10% பற்றிப் பார்ப்போம். ‘கடல் உணவில் பிளாஸ்டிக்’ என்ற அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் 2016-ல் தந்த அறிக்கையில் சில தகவல்கள் இருக்கின்றன. ‘150 மைக்ரான்களுக்கும் (0.15 மில்லிமீட்டர்) குறைவான பிளாஸ்டிக் நுண்துகள்கள் குடலில் நுழையலாம் அல்லது ரத்தத்தில் கலந்து சிறு நீரகங்களையோ ஈரலையோ அடையலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைய பாட்டில் குடிநீர் பற்றிய ஆய்வு முடிவுகள், பிளாஸ்டிக் துகள்களின் அளவு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கிறது. அதே சமயம், குடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக் துகள்கள் என்ன செய்யும் என்பது ஆய்வக முடிவுகளிலிருந்து அல்ல – அறிவியல் அனுமானத்திலிருந்தே கூறப்படுகின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் குறித்தும் நமக்குத் தெரியாது. இதில் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன என்கிறார் முங்க்.

அரசின் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்த பிறகே தண்ணீர் தயாரித்து விற்கப்படுகிறது என்று கூறுகின்றனர் குடிநீர் விற்பனையாளர்கள். ஆர்ப் அமைப்பின் ஆய்வில் கண்டறியப்பட்டதைவிடக் குறைவான அளவு பிளாஸ்டிக் துகள்களே தங்களு டைய தண்ணீரில் இருக்கின்றன என்கிறார் ஜெர்மனி யைச் சேர்ந்த ஜெரோல்ஸ்டெய்னர் என்கிற பாட்டில் குடிநீர் தயாரிப்பாளர்.

ஆர்ப் மீடியாவிடமிருந்து கேள்விகள் வந்த பிறகு, நெஸ்லே நிறுவனம் மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து தருவித்த 6 பாட்டில் தண்ணீரை ஆய்வுக்கு உட் படுத்தியது. ஒரு லிட்டருக்கு 0 முதல் 5 துகள்கள் வரை மட்டுமே இருந்தன என்கிறது. பிற குடிநீர் நிறுவனங்கள் தாங்களே நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்று மறுத்துவிட்டன. நாங்கள் விற்கும் தண்ணீர் பாதுகாப்பானது என்பதை மட்டும் உறுதியாகக் கூற விரும்புகிறோம் என்று அமெரிக்க குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. பிளாஸ்டிக் நுண் துகள் களுக்கு நேரடிக் கட்டுப்பாடு ஏதும் இல்லாவிட்டாலும், தண்ணீரில் ஏதும் கலந்திருக்கக் கூடாது என்று சட்டம் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் அன்கா படுராரு தெரிவிக்கிறார். அமெரிக்காவில் திட்டவட்டமான விதிகள் இது தொடர்பாக இல்லை. ஆர்ப் மீடியா அமைப்பின் ஆய்வு முடிவுகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த ஆய்வுகளை மைக்ரோ-பிளாஸ்டிக் குறித்து ஆராய்ச்சிசெய்யும் ஷெர்ரி மேசன் மேற்பார்வையிட்டார். இவர் நியூயார்க்கில் உள்ள ஸ்டேட் பல்கலைக் கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர். இவர் 2017-ல் ஆர்ப் நடத்திய குழாய்த் தண்ணீரின் பாதுகாப்பு பற்றிய ஆய்விலும் பங்கேற்றிருக்கிறார். ஒவ்வொரு பாட்டிலிலும் ‘நைல் ரெட்’ என்ற சாயம் சேர்க்கப்பட்டது. நுண்ணிய பிளாஸ்டிக்கை அடையாளம் காண இந்தச் சாயம்தான் பயன்படுத்தப்படுகிறது. பிறகு தண்ணீர், மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணு அளவுக்கு அல்லது 1.5 மைக்ரான் (0.0015 மில்லிமீட்டர்) அளவுக்கு வடிகட்டப்பட்டது. குற்றச்செயல் நடந்த இடத்தை ஆய்வுசெய்யும் ஆய்வுக் கருவியின் வெளிச்ச உதவியுடன், நுண்ணோக்கியைக் கொண்டு, ஆரஞ்சு கண்ணாடிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது நுண்ணிய பிளாஸ்டிக்குகள் ஒளிர்ந்து அடையாளம் காட்டிவிடும்.

100 மைக்ரான்கள் அதாவது 0.10 மில்லிமீட்டர் அளவுள்ளவை பெரிய துகள்கள். அவற்றில் பாலிபுரோபிலின் 54%, நைலான் 16%, பிஇடி (பெட்) 6% இருந்தன. கண்ணாடி பாட்டில்களில் விற்கப்பட்ட நீரில்கூட பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. இன்னதென்று இனம் காண முடியாத ஆனால் ஒளிரும் தன்மையுள்ள துகள்கூட பிளாஸ்டிக்குடையது என்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிறார் ஆண்ட்ரூ மேயஸ். இவர் கிழக்கு ஆங்ளியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியர்.

சரி, எங்கள் ஊரில் குழாய்த் தண்ணீர் கிடைக்கிறது. அதைக் குடிக்கலாமா, பாட்டில் தண்ணீரைக் குடிக்கலாமா என்று கேட்கிறீர்களா, குழாய்த் தண்ணீரே மேல் என்கிறார் வடக்கு கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழக நச்சியல் துறைப் பேராசிரியர் ஸ்காட் பெல்சர். அசுத்தம் நிறைந்த, பாதுகாப்பற்ற தண்ணீர்தான் இருக்கிறது என்ற நிலையில், பாட்டில் குடிநீரை மாற்று ஏற்பாடாகக் குடிக்கலாம் என்கிறார் பெல்சர்.

மக்கள் சாப்பிடுவதில், அருந்துவதில் என்னென்ன இருக்கின்றன, அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவு கள் என்ன என்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை என்று நுகர்வோர் குரலாக எதிரொலிக்கிறார் ஆப்டர்.

நன்றி: ஹிந்து  

மேலும் அறிய:https://qz.com/1071764/83-of-tap-water-tested-had-bits-of-plastic-in-it/


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *