இபுபுரூபென் (Ibuprufen) எனும் மருந்து நம் நாட்டில் மிகவும் அதிகம் பயன் படுத்த படுகிறது. வலிகளை போக்க டாக்டர்களால் பரிந்துரை செய்ய படும் மருந்து இது.
நம் நாட்டில் இது சுலபமாக ப்ரெஷகிரிப்ட்டின் இல்லாமல் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும். நம்மில் பலர் உடல் வலிக்கு இதை போட்டு கொள்வது வழக்கம்.
சில வருடங்கள் முன்னால் இபுபுரூபென் மருந்தின் பக்க விளைவுகள் பற்றி தெரிய வந்தது. அதிகம் சாப்பிட்டால் குடல் புண், ஓட்டை போன்ற பயங்கர விளைவுகள்.. இருந்தும் இபுபுரூபென் மருந்து இந்தியாவில் பாப்புலர் மருந்து, வலிகளுக்கு.. விளையாட்டில் ஈடு படும் சிறுவர்கள் காயம் பட்டால் சாப்பிடும் மருந்து இதுவே..
இப்போது CNN இனைய தளத்தில், இந்த மருந்தின் புதிய பக்க விளைவு பற்றி செய்தி வெளியிட்டுளார்கள்.
ஒரு ஆய்வில் 14 நாட்களுக்கு நாள் 2 ஒன்றுக்கு மாத்திரை சாப்பிட்ட வாலிபர்களுக்கு உயிர் அணுக்கள் அதிகம் குறைந்து உள்ளது தெரிந்து உள்ளது. இந்த அளவுதான் டாக்டர்களால் வலிக்கு பரிந்துரை செய்ய படும் அளவு. குழந்தை பிறப்பதில் சிரமம், எதிர்காலத்தில் இதயத்தில் நோய்கள் போன்றவை வர சாத்திய கூறுகள் அதிகம்.
எனவே, அடுத்த முறை கை கால் காயம் ஏற்பட்டால், வலி குறைய இபுபுரூபென் சாப்பிடும் முன் யோசியுங்க..
எல்லா மருந்துகளும் ரசாயனங்கள் தான். உடலில் பக்க விளைவுகள் இருக்கும். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே சாப்பிட வேண்டும்
நன்றி: CNN
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்