பெயிண்ட்களில் எந்த அளவு ஈயம் உள்ளது விவரங்கள்

புது டெல்லியை சேர்ந்த Center for Science and Environment நிறுவனம் சந்தையில் உள்ள பெயிண்ட்களை வாங்கி அவற்றில் ஈயம் (lead) உள்ளதா என்று பரிசோதித்து பார்த்தது. பல வண்ணங்களில் இந்த பெயிண்ட்கள் விற்பனை செய்ய படுகின்றன.

ஈயம் குழந்தைகள் உடலுக்கு தீங்கு என்பது ஆராய்ச்சி மூலம் தெளிவான ஒரு விஷயம். குழந்தைகள் பெயிண்ட் அடிக்கப்பட்ட கதவுகள் சுவர்களை நக்குவதால் அவை குழந்தைகளின் உடலில் செல்கின்றன. பல ஆண்டுகள் வரை குழந்தைகளின் மன மற்றும் உடல்நிலை இவற்றால் பாதிக்கபடுகின்றன

கேரளா, ஆந்திரா மணிப்பூர் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடைகளில் கிடைக்கும் 20 பெயிண்ட்கள் பரிசோதிக்க பட்டன.

2017 ஆண்டு சட்டப்படி அவற்றில் ஈயம் இருக்க கூடாது. குறைந்த அளவாக 90 ppm (Parts per million) இருக்கலாம்.

ஆனால் Home Care glossy (White),Varlac Premium Satin Enamel (Olive) and Varlac Premium Satin Enamel (Cherry Red) என்ற மூன்று பெயிண்ட்கள் மட்டுமே 90 பிபிஎம் கீழே ஈயம் இருந்தது, British Paints (Bus Green)and British Paints (Oxford Blue) ஆகியவற்றில் 100-110 பிபிஎம் இருந்தது. (சட்டப்படி இருப்பதை விட சிறிது அதிகம்)

ஆனால் மற்ற எல்லா பெயிண்ட்கள் 2117 பிபிஎம் to 1.3 லட்சம் பிபிஎம் .வரை அதிகம் ஈயம் இருந்தது!!

பழைய காலம் போல் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்து விடுவது எவ்வளவோ மேல். குழந்தைகள் நக்கினனால் அவற்றுக்கு கால்சியம் கிடைக்கும். எந்த விஷமும் இருக்காது!

பரிசோதிக்க பட்ட பெயிண்ட் அவற்றில் உள்ள ஈயம் அளவு பற்றிய அறிக்கையை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *