ப்ராய்லர் கோழியின் கதை

இப்போது எங்கு பார்த்தாலும் ப்ராய்லர் சிக்கன் விற்க படுகிறது. இதன் கடை உருவானது கடந்த 50 ஆண்டுகளில் தான். இந்த சோக கதையை சற்று பார்போமா?

ஏறத்தாழ 8000 ஆண்டுகள் முன் மனிதன் ஆடு, மாடு, நாய், பூனை, குதிரை ஆகியவற்றை வளர்க்க ஆரம்பித்த போது காட்டில் இருந்த கோழியும் வளர்க்க ஆரம்பித்தான். இவை அப்படியே இந்த நூற்றாண்டு வரை இருந்தது.

50 ஆண்டுகள் முன் கோழிகள் தொழிற்சாலைகளில் வளர்க்க நிறைய தொழிற்நுட்ப மாற்றங்கள் செய்ய பட்டன. இப்போது கோழிகள் இரண்டு விதம் – லேயர்ஸ் – முட்டை ஈடுபவை, ப்ராய்லர்ஸ் – உண்ண வளர்க்கப்படுபவை.

ஒரு காட்டு கோழி 50 ஆண்டுகள் முன் வருடத்திற்கு ரெண்டு டஜன் முட்டைகள் இடும். இன்றைய லேயர் கோழி இப்போது 250 முட்டைகள் போட வைக்கிறார்கள். வாழக்கை முழுவதும் இது முட்டை போட்டு இருக்கிறது. இறந்த பின் இதன் உடலை அரைத்து திரும்பி கோழிக்கே உணவாக கொடுக்கிறார்கள்

ப்ராய்லர் கோழிகள்


இன்றைய ப்ராய்லர் கோழிகள் 1950 களில் சிறப்பான கோழிகளில் இருந்து வளர்க்கப்பட்டதவை. இதன் ஒரே குறிக்கோள் கோழி சீக்கிரம் எடை சேர்க்க வேண்டும். இன்றைய கோழி இப்போது 3 கிலோ வரை உள்ளது. 50 ஆண்டுகள் முன் இதன் எடை இதில் பாதி தன்.

அது மட்டும் இல்லாமல், மனிதனுக்கு நல்ல சுவை தரம் மார்பு பகுதி (Chicken Breast) 80% அதிகம் வளரும் படி மாற்றி அமைக்க பட்டுள்ளது. 50’களில் 15 வாரத்தில் வந்த வளர்ச்சி இப்போது 6 வாரத்தில் வரும் படி அவற்றுக்கு கொழுப்பு அதிகம் உள்ள உணவு கொடுக்கப்படுகிறது. எப்போதும் சாப்பாடு கொடுத்து கொண்டே இருப்பதால இவை உப்புகின்றன (Bloat).

அதிகம் எடை இருப்பதால் இவற்றின் கால்கள் நடக்க முடியாமல் தடுமாறுகின்றன. இயற்கைக்கு புறம்பான வகையில் இவை வளர்க்க படுவதால், இவற்றில் பல எலும்புகள் முறிந்தும், வியாதிகள் உடனுடனும் இருக்கின்றன.

இது போதாதென்று, இவை இன்னும் வேகமாக வளர இவற்றின் உணவில் ஆன்டி பயாடிக் சேர்க்கின்றனர். இதனால் மனிதர்குலத்திற்கே வரும் காலத்தில் ஆன்டி பயாடிக் எதிர்ப்பு (Anti biotic Resistance) வரும்.

ஆக மொத்தம், மனிதன் கோழியின் உயிரியலையே மாற்றி விட்டான்!

இப்போது சொல்லுங்கள் நீங்கள் இந்த உணவை உண்டு எப்படி ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

மேலும் தெரிந்து கொள்ள –


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *