கோலிஸ்டின் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கும் நீங்கள் உண்ணும் பிரியாணிக்கும் உள்ள உறவு எப்படி நம் மனித குலத்தையே அழிக்கும் அளவுக்கு ஆபத்து தெரியுமா?
நமக்கு உடம்புக்கு வந்தால் மருத்துவரிடம் செல்வோம். பல வியாதிகள் பாக்டீரியாவால் வருகின்றன. இவற்றை கொல்ல ஆன்டி பயாடிக் மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. Amoxicillin, Azithromycin, Cephalexin, Ciprofloxacin போன்றவை பிரபலமானவை. இவை வேகமாக பலன் கொடுக்கும் மேஜிக் மருந்துகள். இவை இல்லாவிட்டால் மனித குலம் தினமும் ஆயிரக்கணக்கில் உயிர் இழந்து கொண்டிருப்போம்.
இவை தான் இன்றைய மருத்துவத்தின் சொத்துக்கள். இவை தான் டைபோய்டு, ஜாண்டிஸ் என பல நோய்களில் இருந்து நம்மை காக்கின்றன .
அது சரி, இவற்றுக்கும் பிரியாணிக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கிறது.
ப்ராய்லர் கோழிகள் வேகமாக வளர சிறிய அளவில் ஆன்டி பயாடிக் கொடுக்கலாம் என்று அமெரிக்காவில் 1960களி ல் கண்டு பிடிக்க பட்டது. சிறிய அளவு வீரியமான பென்சிலின் போன்ற மருந்துகள் முதலில் கொடுக்கப்பட்டன.
இப்போது இந்தியாவில் ப்ராய்லர் கோழிகள் வேகமாக வளர கொல்ஸ்டின் (Colistin) என்ற ஆன்டி பயாடிக் கொடுக்க படுகிறது என்று புலன் விசாரணையில் தெரிந்து வருகிறது. கோலிஸ்டன் தான் ICU வரை சென்று வரும் தீவிர தொற்றுக்கெல்லாம் இப்போது உள்ள கடைசியான மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி பயாடிக். அதாவது ப்ரஹ்மாஸ்திரம் போன்றது. இதை தின்னும் கோழிகளை நாம் உண்ணும் போது இந்த மருந்து நமக்கும் வருகிறது. சில நாட்களில், நம் உடல் இந்த ஆன்டி பயாடிக் சாதாரண உணவு என்று எடுத்து கொள்கிறது.
பிறகு எப்போவாவது உங்களுக்கு உடல் தொற்று வந்தால் எந்த ஆன்டி பயாடிக்கும் வேலை செய்யாது. ICU மரணம் தான்!
இது ஏதோ சிறு கோழி வளர்ப்பவர்கள் தான் செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். பெரிய பிராண்டட் ப்ராய்லர் கோழி வளர்ப்பாளர்களான வெங்கி Venky போன்றவர்கள் கூட செய்கிறார்கள். இதனால் It revealed the use of colistin by companies such as Venky’s, the biggest supplier of chicken products to fast-food outlets such as McDonald’s, Pizza Hut and KFC என்கிறது புலன் அறிக்கை!
முடிந்த அளவு ப்ராய்லர் கோழி பிரியாணி வகையறாக்களை குறைத்து உண்ணவும். நம் நாட்டில் நாம் தான்
நம்மை காத்து கொள்ள வேண்டும்
மேலும் படிக்க :
- https://www.livemint.com/Industry/yt5eE5hqMLYP1px2d63Q1K/Govt-may-ban-antibiotic-colistin-used-to-fatten-chicken.html
- https://scroll.in/latest/867324/chickens-in-india-are-dosed-with-a-very-strong-drug-used-to-treat-critically-ill-patients-study
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்