தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது என்கின்றனர் டாக்டர்கள். ஆனால் மெழுகு தடவிய ஆப்பிள் தினமும் சாப்பிட்டால் பிரச்னை தான்.
மெழுகு தடவிய ஆப்பிள் குறித்து மதுரை தியாகராஜர் கல்லுாரி தாவரவியல் உதவி பேராசிரியர் கண்ணன் கூறியதாவது:
பழங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருப்பதற்காக தேன் மெழுகு தடவப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் தான் மெழுகு கோட்டிங் காணப்படும். பார்ப்பதற்கு அழகாக, கவர்ச்சியாக, வாங்கத்துாண்டும் வகையில் இந்த மெழுகு பூசப்படும்.
அதிலுள்ள மெழுகை சுரண்டிய பின் பழத்தை நறுக்கினால் உள்ளே கறுப்பாக மாறிவிடும். விரைவில் அழுகி விடும்.ஆப்பிள் பழத்தை தோலை சீவாமல் அப்படியே சாப்பிட்டால் தான் அதிலுள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் தோலை சீவாமல் மெழுகுடன் சாப்பிட்டால் வயிற்றில் மெழுகு படிந்து செரிமான பிரச்னை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் பாதிக்கலாம் என மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
காஷ்மீர், டில்லி, இமாச்சல், சிம்லாவில் இருந்து கிடைக்கும் பழங்கள் நன்றாக இருக்கும். அதில் மெழுகு தடவப்பட்டிருக்காது. செப். முதல் மார்ச் வரை தான் இப்பழங்கள் கிடைக்கும். பின் வரத்து குறைவாக இருக்கும். தற்போதைய சீசனில் அதிகமாக கிடைப்பது வெளிநாட்டு ஆப்பிள்கள் தான்.ஆப்பிள் மட்டுமல்ல பேப்பர் கப்களின் உட்பகுதியிலும் மெழுகு தடவப்பட்டு வருகிறது. இவற்றில் சூடான காபி, டீ, பால் குடித்தால் மெழுகு உருகி வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்புள்ளது. மெழுகு தடவாத பேப்பர் கப்களில் குடிக்க பழகலாம். அல்லது கண்ணாடி, எவர்சில்வர் டம்ளர்களை பயன்படுத்தலாம், என்றார்.
ஆப்பிள் மெழுகு கோடிங் பற்றிய -வீடியோ இங்கே பார்க்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “மெழுகு பூசிய ஆப்பிள் ஆபத்து!”