474 ஆக இருந்து 43 ஆக குறைந்த சென்னை ஏரிகள்!

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த நில நாட்களாக நகரமே வெள்ளக்காட்டில் மிதந்தது.

சென்னை நகரில் இருந்த பெரும்பாலான நீர்நிலைகளை ஆக்கிரமித்ததால்தான் சென்னை நகருக்கு இந்த நிலை என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி சென்னையில் ஏரி, குளம் என 474 நீர் நிலைகள் இருந்துள்ளன.கடந்த 2013ஆம் ஆண்டு அதுவே 43 ஆக குறைந்துள்ளது. தற்போது அதிலும் 96 சதவீத நீர்நிலைகளை காணவில்லை அல்லது  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் பட்டியல்

1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால்)
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் – ஸ்பர்டாங்க் ரோடு),
26.செம்பாக்கம் ஏரி,
27.சிட்லபாக்கம் ஏரி ,
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்…..
32.ஆலப்பாக்கம் ஏரி,
33. வேப்பேரி,
34. விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
35. கோயம்பேடு சுழல் ஏரி,(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
36. அல்லிக் குளம் ஏரி( நேரு ஸ்டேடியம்)

நன்றி: விகடன்

இவற்றில் பல ஏரிகள் நம் கண் முன்பே  போயிருக்கின்றன. பள்ளிகரணை ஏரியில் குப்பையை கொட்டி கொட்டி மேடாக்கி பல IT  நிறுவனங்கள்,  வீடுகள்.இப்போதும் மேற்கு மாம்பலம் சென்றால் lake view சாலையை பார்க்கலாம்! ஏரியை தான் காணோம்!இந்த அழிக்கப்பட்ட ஏரிகளை பின்னொரு முறை விவரமாக பார்போம் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *