ஆட்டு கிடைகள் மூலம் ஆத்தூர் பகுதியில் இயற்கை உரம்

ஆட்டு கிடைகள் வைத்து இயற்கை உரம் பெறுவதை ஏற்கனவே படித்து உள்ளோம். அதை பற்றிய தினமலரில் வந்த இன்னொரு செய்தி:

  • ராமநாதபுரம் மாவட்ட செம்மறி ஆடுகள் வளர்ப்போர், “நடோடிகள்’ போன்று, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, ஆடுகள் மேய்த்து வருகின்றனர்.
  • ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், செம்மறி, மாலாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. அம்மாவட்டங்களில், கால்நடை மேய்ச்சல் நிலம் போதியளவில் இல்லாததால், ஆடு வளர்ப்பவர்கள், சேலம், ஆத்தூர், தலைவாசல், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, நீர் நிலை மற்றும் தரிசு நிலங்களில், ஆடுகளை மேய்த்து வருகின்றனர்.
  • இப்பகுதியில், மேய்ச்சல் நிலம், ஏரி, ஆறு, நீரோடை மற்றும் தரிசு நிலங்கள் அதிகளவில் உள்ளன. அதனால், ராமநாதபுரம் செம்மறி ஆடு வளர்ப்பவர்கள், ஆத்தூர், தலைவாசல் பகுதியில் முகாமிட்டு, ஆடு மேய்த்து வருகின்றனர்.
  • இந்த ஆடுகளின் கழிவுகள், விளை நிலங்களில், இயற்கை உரமாக பயன்படுத்துவதன் மூலம், நல்ல மகசூல் கிடைத்து வருகிறது.
  • செம்மறி, மாலாடுகளின் கழிவுகள், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
  • அவ்வாறு, மேய்ச்சலுக்கு கொண்டு வரும் செம்மறி ஆடுகளை, பயிர் செய்யும் விளை நிலங்களில், “கிடை’ அமைக்க வாடகை கொடுக்கின்றனர்.
  • அவ்வாறு, இரவு நேரத்தில், செம்மறி ஆடுகள், கிடைகளுக்குள் உமிழும் சிறுநீர், புழுக்கைகள் போன்ற கழிவுகள், மகத்துவம் வாய்ந்த உரமாக, விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
  • அதனால், செம்மறி ஆடுகளுக்கு, தலா இரண்டு ரூபாய் வீதம், வாடகையாக, ஆடு வளர்ப்பவர்களுக்கு, விவசாயிகள் கொடுக்கின்றனர்.
  • இதனால், மாலாடு, செம்மறி, குறும்பை ஆடுகளுக்கு, ஆத்தூர், தலைவாசல் பகுதி விவசாயிகள் மத்தியில், பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஆட்டு கிடைகள் மூலம் ஆத்தூர் பகுதியில் இயற்கை உரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *