சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாய் திருமதி ராஜரீகா அவர்களின் இயற்கை பூச்சி கொல்லி கண்டுபிடிப்பு ஒன்றை ஏற்கனவே பார்த்துள்ளோம். இதோ, இன்னும்ஒன்று: இஞ்சி பூண்டு கரைசல்
இந்த கரைசலை தயாரிப்பது எப்படி?
ஒரு கிராம் இஞ்சி, ஒரு கிராம் பூண்டு , இரண்டு கிராம் பச்சை மிளகாய் எடுத்து கொள்ளவும். இவற்றை நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பிளாஸ்டிக் கானில் ஐந்து லிட்டர் பசுவின் சிறுநீர் (கோமூத்திரம்) எடுத்துக்கொண்டு, அதில் இதை கரைக்கவும்.
பத்து நாட்கள் கழித்து இஞ்சி பூண்டு கரைசல் ரெடி. இந்த கரைசலை வடி கட்டி பயன் படுத்தவும்.
இந்த கரைசலை 1/2 லிட்டர் எடுத்து 10 லிட்டர் நீரில் சேர்த்து, கரைத்து பயிர்களின் இலைகள் மீது தெளித்தால், பூச்சிகள்
மறைந்து விடும் என்கிறார் இவர்.
இவரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ராஜரீகா, ராசி இயற்கை வேளாண்மை பண்ணை, முத்துப்பட்டி, கல்லால் வழி, சிறுவயல் போஸ்ட், சிவகங்கா மாவட்டம், தமிழ் நாடு
மொபைல்: 09865582142, phone: 04565284937.
ஈமெயில்: rajareega@rediffmail.com
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
இயற்கை விவசாயம் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
DEAR SIR ,
இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு , மற்றும் பயிர் ஊக்கியின் விவரம் குறித்து தகவல் அனுப்பவும்.
இப்படிக்கு,
முருகேசன்
9629635988