இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி?
தற்போது இயற்கை விவசாயம் பெருமளவில் விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பூச்சிக் கட்டுப்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஒரு எளிமையான முறை ஒன்றை தற்போது காண்போம். இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் என்பது இதன் பெயர்.
- பூண்டு ஒரு கிலோ எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
- பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ள வேண்டும்).
- இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார்.
- இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
- காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.
- இதன்மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.
- இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.
-எம்.அகமது கபீர்,
தாராபுரம்-638 656.
அலைபேசி எண்: 09360748542.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
வேம்பு எண்ணெய் சார்ந்த தாவர பூச்சிக்கொல்லி
வேம்பு எண்ணெய் சார்ந்த தாவர பூச்சிக்கொல்லி Nimbecidine EC
இலை தழை தெளிப்பு – நீருடன் கலக்கும் Nimbecidine மூலம் தெளிப்பு திரவம் தயாரித்தல் @ 5 மிலி / லிட்டர். தெளிப்பு திரவம் நேரடியாக பூச்சிகள் குறிவைத்து பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு மற்றும் தெளிப்பு திரவம் தொகுதி பூச்சி நிலை, பயிர் விதானம் மற்றும் உள்ளூர் தெளிப்பு நடைமுறைகளை மாறுபடும்.
காலையில் அல்லது தாமதமாக மாலை மணி முன்னுரிமை பொருந்தும்.
நன்மைகள்
* இது திறம்பட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த போன்ற Whitefly போன்ற பூச்சிகள், Aphids, Thrips, மாவு பிழைகள், Caterpillars மற்றும் பயிர்கள் பல்வேறு Leafhoppers கட்டுப்படுத்துகிறது.
* அது நன்மை பயக்கும் ஒட்டுண்ணிகள் மற்றும் ஊனுண்ணிகளை போன்ற இயற்கை எதிரிகள் பாதுகாப்பாக மேலும் ஆகையால் நீண்ட நீடித்த பூச்சி கட்டுப்பாட்டை வழங்குகிறது.
* பூச்சிகள் Nimbecidine எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கி முடியாது.
* பூச்சிகளை கட்டுப்படுத்தும் மற்றும் பயிர் சுகாதார முன்னேற்றுவதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது.
* அது நன்மை பயக்கும் பூச்சிகளை & ஊனுண்ணிகளை தீங்கு இல்லை.