இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சி கட்டுப்பாடு

  • இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும்.
  • ஒவ்வோர் பூச்சியும் எதிர் பாலினத்தைக் கவர்ந்து உறவுகொள்ள ஒரு விதமான வாசனையுள்ள ஹார்மோனை வெளியிடும். இந்த வாசனையை நுகர்ந்து ஆண் அல்லது பெண் பூச்சிகள் தங்கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் கொண்டுதான் இனக்கவர்ச்சி பொறிகள் செயல்படுகின்றன.
  • இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் பின்னர் அழிக்கப்படும். இதன்மூலம் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிறது.
  • முட்டையிடுதல் தவிர்க்கப்படுவதால் புழுக்கள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்பட்டு பூச்சி மருந்தின் தேவையும் குறைகிறது.
  • இனக்கவர்ச்சிப் பொறிகள் மூலம் எல்லாவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட பயிர்களில் குறிப்பிட்ட பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தவல்லது.
  • கத்தரி தண்டு துளைப்பான், வேர்க்கடலை இலை மற்றும் காய் துளைப்பான், தக்காளி காய் துளைப்பான், நெல் தண்டு துளைப்பான். பொறிகள் வைப்பதால் பூச்சி மருந்தின் தேவை குறைகிறது.
  • ஒரு ஏக்கருக்கு 5-6 பொறிகள் வைத்தால் போதுமானது.

ஒட்டும் பொறி:

  • சாறு உறிஞ்சும் பூச்சிகளான கொசு, வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஒட்டும் பொறி பயன்படுகிறது.
  • ஒரு தகரஷீட்டில் மஞ்சள் பெயின்ட் அடித்து அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி வயல்களில் வைத்தால் இந்தப்பூச்சிகள் தகர ஷீட்டில் ஒட்டிக்கொள்ளும்.
  • வெண்டை, பருத்திப்பயிரில் இது பெரிதும் பயன்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 4-5 பொறிகள் வைத்தால் போதுமானது. இருப்பினும் பூச்சி தாக்குதலுக்கேற்ப பொறிகளின் எண்ணிக்கை மாறலாம்.

-எம்.அகமது கபீர்,
தாராபுரம்-638 656.

அலைபேசி எண்: 09360748542.
நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *