இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி

பசுமை தமிழகத்தில் பல வகை இயற்கை பூச்சி கொல்லிகளை படித்து இருக்கிறோம். இதோ, இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி..

இயற்கை விவசாயியான திரு ராம ரெட்டி அவர்கள் இரண்டு முறைகளில் இயற்கை பூச்சி கொல்லிகளை தயாரிக்கலாம் என்கிறார்:

  • ஒரு கிலோ இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைக்கவும். இதனுடன், ஐந்து லிட்டர் கோ மூத்திரத்தை கலந்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட் ஐந்து மில்லி எடுத்து ஒரு லிட்டர் நீருடன் கலந்து தெளித்தால் பூச்சிகள் கட்டுபடுத்தபடும்.
  • ஒரு லிட்டர் நீரில் இருநூறு மில்லி சூடோ மோனமஸ் திரவத்தை கலக்கவும். இதனுடன், ஐநூறு கிராம் க்ளுகோஸ் கலக்கவும். இந்த திரவத்தை ஒரு நாள் வைத்திருந்து மறு நாள், அதனுடன் இரண்டு லிட்டர் பசும் பால், இரு நூறு லிட்டர் நீருடன் கலந்து பயிர்களில் தெளித்தால், பயிர்களில் வரும் பூச்சிகள் கட்டுப்படும்.

மேலும் விவரங்களுக்கு திரு ராம ரெட்டியை இந்த அலைபேசியில் அணுகலாம்: 09789662957 மற்றும் 04347294158

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *