இயற்கை உரங்களை இடுவீர் – இணை இயக்குனர் அறிவுரை

“விவசாயத்தில் மண் வளத்தைப் பாதுகாத்து நல்ல மகசூல் பெற இயற்கை உரங்களை இட வேண்டும்.”  என்று வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.

  • விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தேவைப்படும் ரசாயன உரங்களை அளவாக இடவேண்டும்.
  • இயற்கையான தொழு உரம், பசுந்தாள் உரம், மற்றும் தழை உரங்களை போதியளவு இடவேண்டும்.
  • காற்றில் உள்ள தழைச் சத்தை கிரகிக்கும் உயிர் உரங்களை இட வேண்டும்.
  • பாசன நீர் பரிசோதனை செய்தும், உரிய நீர் மேலாண்மை முறைகளை கடைபிடித்து மண்வளத்தை பாதுகாத்தல் வேண்டும்.
  • படிகட்டு சாகுபடி, குறுக்குச் சாலர் உழவு செய்தல், மரங்களை நடவு செய்தல், வேர் பிடிப்பு மிக்க வெட்டிவேர், கற்றாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து மண் அரிமானத்தை தடுத்தல்
  • வடிகால் வசதியை சீராக்கி, மண் வகைக்கேற்ப பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *