இயற்கை உரமான மீன் அமிலம் தயாரிப்பது எப்படி?

எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை:

 • ஒரு கிலோ நாட்டு சர்க்கரை,​​ ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
 • நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும்.​ மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.
 • இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.​ பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.
 • இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
 • பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.
 • ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 • தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
 • நாய்,​​ பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
 • மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.
 • விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.
 • மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும்.
 • இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ,​​ பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.

எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி,​​ உற்பத்தித் திறன் மற்றும் மகசூல் பெற்று தரும் இயற்கை முறையிலான மீன் அமினோ அமிலத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “இயற்கை உரமான மீன் அமிலம் தயாரிப்பது எப்படி?

 1. Assaithambi C says:

  மிகவும் அருமை… இது போன்ற தகவல்களை தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம்…. மிக்க நன்றி… இயற்கை விவசாயம் ஓங்குக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *