”இயற்கை வேளாண்மையில், நான்கு முறைகளில், பூச்சி நோய் மேலாண்மை செய்ய வேண்டும்,” என, மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
- கோடை உழவு செய்தால், கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படும்.
- நோயற்ற, சான்று பெற்ற, பூச்சிநோய் எதிர்ப்புத் தன்மையுள்ள விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களை, ஒரே நேரத்திலும், பயிர் சுழற்சி முறைகளை கையாள வேண்டும்.
- பொறி பயிர், ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
- புகையானில் இருந்து தப்பிக்க, நீர்மறைந்த பின், நீர்கட்ட வேண்டும்.
- பூச்சிநோய் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கியும், முட்டை புழுக்களை சேகரித்தும் அழிக்க வேண்டும்.
- பறவை இருக்கைகள், இனக்கவர்ச்சி பொறிகள் அமைக்க வேண்டும்.
- வயலுக்கு நன்மை செய்யும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
- வேப்பங்கொட்டை போன்ற தாவரப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
- இம்முறையில், பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கலாம், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்