கத்திரி பயிர் என்றாலே வித விதமான பூச்சி தாக்குதல் என்று பெயர் எடுத்த ஒரு பயிர். விளைச்சல் செலவில் அதிகம் ரசாயன பூச்சி மருந்துகளிலே செலவாகும். இந்த கத்திரியை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் ஒரு விவசாயின் அனுபவம்:
இரு ஆண்டுகளுக்கு காய்ப்பு தரும், நீள மற்றும் குண்டு ரக கத்தரிக்காயை பயிரிட்டுள்ள இயற்கை விவசாயி, ராமசுப்பிரமணிய ராஜா கூறுகிறார் :

- விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவன் நான்.
- கத்தரி சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். 25 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட நாற்றங்கால் அமைத்து, நன்கு மக்கிய தொழு உரத்துடன், இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போட வேண்டும்.
- காய்கறிச் செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசணக் கொல்லியை, நாற்றங்காலுக்கு இட்டு, மண்ணை நன்கு கொத்தி விட வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு, 200 கிராம் விதை வேண்டும். நடவு வயலில், நன்கு மக்கிய தொழு உரம் போட்டு நிலத்தை உழுது, பார்சால் போட வேண்டும்.
- நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான, 28 நாள் நாற்றை எடுத்து, நடவு வயலில் நட வேண்டும்.
- நடவு செய்த மூன்றாம் நாள், உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின், வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.
- மழைக் காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- நடவு நட்ட, 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும், மக்கிய தொழு உரம், பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும்.
- தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த, வேப்பம் புண்ணாக்கை, கத்தரிச் செடியின் வேர்ப்பகுதியில் வைத்து, மண் அணைப்பு செய்தல் அவசியம்.
- பூ பூக்கும் பருவத்தில், தண்ணிரில், வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.
- கத்தரிக்கு உள்ளே புழு தாக்கினால், பெவேரியா பேசியானா எனும் உயிர் ரக பூஞ்சாண மருந்தை தண்ணீரில் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
- இலைப்பேன் தாக்கினால், நான்கு நாட்கள் புளித்த மோரில், தண்ணீர் கலந்து தெளித்தால், இலைப்பேன் கொட்டிவிடும்.இதனால், செடியில் பல புதிய துளிர்களும் உண்டாகும்.
- மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்க, தண்ணீரில் மீன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.
- விதைத்த, 60 – 70 நாட்களில், முதல் அறுவடை ஆரம்பிக்கும்.
- காய்களை, நான்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளியில், இளங்காயாக இருக்கும் போதே அறுவடை செய்ய வேண்டும்.
- நீளம் மற்றம் குண்டு ரக கத்தரி என்பதால், ஒரு கத்தரிக்காயின் எடையே, 300 கிராம் இருக்கும். ஏக்கருக்கு, 5,000 கிலோ காய்கள் கிடைக்கின்றன.
- இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி என்பதால், காய்கள் நல்ல விலைக்குப் போகின்றன.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
I am accept so nice ideas thanks.
Please provide complete and full details
The information ratios of manure to be mentioned. What is the use simply so and so items to be used
Please rectify
மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தான் என்பது போல் உள்ளது.பூச்சி கொல்லி ,உரம் ஆகியவற்றின் ratio இல்லை.