இயற்கை முறையில் நெல் சாகுபடி களப்பயிற்சி !!

இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கும், மற்ற விவசாயிகளுக்கும், பயிர்களுக்கு வழங்கப்படும் இயற்கை உரம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் சார்பாக பயிர்களுக்கான இயற்கை விவசாய களப்பயிற்சியானது பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை சார்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று (2.2.18) இயற்கை முறையில் நெல் சாகுபடி களப்பயிற்சி நடைபெற உள்ளது.

இயற்கை விவசாயக் களப்பயிற்சி :

ஈஷா விவசாயம் சார்பாக தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பமாக கருந்தப்படும் இடுபொருள் தயாரிப்புக் களப்பயிற்சி நடைபெறுகிறது. இந்த களப்பயிற்சியானது முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும் வல்லுநர்களால் கற்றுத்தரப்படுகிறது.

இந்த களப்பயிற்சியில் விதை நெல் சேகரிப்பு, குறைந்த நெல்லில் நாற்று விடுதல், இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள், பயிர்களில் பு+ச்சி மற்றும் நோய் மேலாண்மை, நீர் நிர்வாகம், பயிர் அட்டவணை போன்ற இயற்கை சாகுபடி குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இரசாயான உரத்துக்கு மாற்றாக உள்ள இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி எப்படி நெல் சாகுபடி செய்வது போன்ற பயிற்சிகள் இவ்வகுப்பில் கற்றுத் தரப்படுகிறது.

பயிர்களுக்கு சரியான இயற்கை இடுபொருள்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய துவங்கிய முதல் வருடத்திலேயே அதிக லாபம் எப்படி பெறவது எனவும் இந்த களப்பயிற்சியில் தெரிந்துக்கொள்ள முடியும்.

இப்பயிற்சி வகுப்பானது திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 02.02.18 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நல்லவன் பாளையத்தில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் நடைபெற உள்ளது.

நடைபெற உள்ள பயிற்சி நிகழ்வுகள் :

👉 இயற்கை விவசாயம் குறித்து அறிமுக உரை, இடுபொருள் தயாரிப்பு குறித்து விளக்க உரை, 12 வகையான இடுபொருள் தயாரிப்பு நேரடி செயல் விளக்கம், இயற்கை முறையில் நெல் சாகுபடி முறைகள், பங்கேற்பாளர்களே நேரடியாக இடுபொருள்களை தயாரிப்பதற்கான களப்பயிற்சி, கேள்வி பதில் மற்றும் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

நாள் : 02.02.18 (காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை)

கட்டணம் : ரூ. 300

முன்பதிவிற்கு : 08300093777

முகவரி :

ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை,சாவல்புண்டி சாலை,நல்லவன் பாளையம்,திருவண்ணாமலை மாவட்டம் – 606603.

திருவண்ணாமலையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள நல்லவன் பாளையம் உள்ளது


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *