இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் “ஜீரோ பட்ஜெட்‘” இயற்கை விவசாயம் குறித்த நான்கு பயிற்சி முகாம் நடக்கிறது.
விழுப்புரம் ஜெயசக்தி திருமண மண்டபத்தில் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் இம்முகாமில் சுபாஷ் பாலேக்கர் கலந்து கொண்டு 30 ஆண்டு கால இயற்கை வழி விவசாய அனுபவம் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கிறார்.
இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாய விலைபொருள் வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்