திருவள்ளூர் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தில் மாங்காய்களை அதிகளவில் செழிக்க வைத்து சாகுபடி செய்துள்ள விவசாயி பாரதியிடம் இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.
இவர் திருவாலங்காட்டை அடுத்த காவேரிராசபுரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாங்காய், சப்போட்டா, நெல்லிக்காய் என பல்வேறு வகையான மரங்களை பயிரிட்டு வருகிறார்.
இவர் அனைத்து வகையான பயிர்களும் இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்துள்ளார்.
தற்போது சீசனுக்கு ஏற்றபடி இயற்கை விவசாயத்தில் அதிகளவு சாகுபடி செய்துள்ளார்.
இது குறித்து பாரதி கூறும்போது, “எங்களது தோப்பில் நெல்லிக்காய், சப்போட்டா, தென்னை, தேக்கு என பல்வேறு வகையான மரங்களை வளர்த்து அதில் இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்துள்ளோம். தற்போது எங்களது தோப்பில் பெங்களூரா, செந்தூரா, அல்போன்சா, காலப்பாடி, இமாயத், மல்கோவா உள்ளிட்ட பல வகையான “மா’ ரகங்களை சாகுபடி செய்துள்ளோம்.
தண்ணீர் பாய்ச்சுவது அனைத்தும் சொட்டு நீர்ப் பாசன வகையில் செய்கிறோம்.
மாமரத்துக்கு ஒரு ஏக்கருக்கு கொம்பு சானவுரம் (500) 35 கிராம், கொம்பு சிலிக்கான் (501) 5 கிராம், சானமூலிகை 1 கிலோ என இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
ஆண்டுதோறும் இயற்கை விவசாயத்தில் அதிக அளவில் சாகுபடி செய்து பயன்பெறுகிறோம். இதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் விளை பொருள்களால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் மண் வளமும் பெருகும். இயற்கை விவசாயத்தில் சிறந்த சாகுபடியாளர் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் அரசிடம் விருது பெற்றுள்ளேன்.
விருப்பமுள்ள விவசாயிகள் 09940017635, 09380533376 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்