இயற்கை விவசாயம் மூலம் உலக சாதனை

ஒரு காலத்தில் பீகார் என்றால் மோசமான செய்திகள் தான் வரும்.
கங்கை நதியில் வெள்ளம், இல்லாவிட்டால் எதோ ஒரு ரயில் தடம் புரண்டு இருக்கும். மாட்டு தீவன ஊழலில் புகழ் பெற்ற பீகாரில் எல்லாம் சாதி மயம் தான்.
சுதந்திரம் பெற்ற போது பீகார் இந்தியாவில் பொருளாதரத்தில் இரண்டாவது இடத்தில இருந்தது. முப்பது ஆண்டுகளில் அதல பாதாளத்தை சேர்ந்தது

இப்போது அங்கே வந்துள்ள புது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பீகார் மீண்டும் எழுச்சி பெற ஆரம்பித்து உள்ளது. மற்ற எல்லா மாநில முதல்வர்கள் போல் அவர் பயிர் நிலங்களை பிடுங்கி தொழிற் சாலைகள் ஆரம்பிக்க வில்லை. மக்கள் தொகை அதிகமான பீகார் முன்னேற வேண்டும் ஆனால் விவசாயம் முன்னேற வேண்டும் என்று அறிந்து உள்ளார்.

அதுவும் இயற்கை முறை விவசாயம் தான் விவசாயிகளுக்கு விடி மோட்சம் என்றும் தெரிந்து அந்த மாநிலம் இயற்கை விவசாயத்தை ஆதரவு தருகிறது.

இப்போது அந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. பீகாரை சேர்ந்த ஒரு விவசாயி ஒரு ஹெக்டேரில் 72.9 டன் உருளை சாகுபடி செய்து உலக சாதனை செய்து உள்ளார். கின்னஸ் ரெகார்ட் பதிவு செய்ய பட்ட இந்த சாதனை செய்தவர் இயற்கை முறை விவசாயம் செய்பவர் என்பது வியப்பாகும். இதற்கு முன் இருந்த சாதனை நேதேர்லண்டில் இருந்து ஹெக்டேருக்கு 45 டன் விளைப்பகும்.

இதே போல் செம்மை சாகுபடி (SRI) மூலம் அரிசி சாதனையும் பீகாரில் படைக்க பட்டு உள்ளது. சுமந்த் குமார் என்ற இளம் விவசாயி ஹெக்டேருக்கு 224 quintal அரிசி விளைவித்து உள்ளார். இதற்கு முன் சீனாவை சேர்ந்த லோன்க்பிங் என்பவற்றின் சாதனை ஹெக்டேருக்கு 190 quintal ஆகும்.

இந்த செய்திகள் மூலம் நமக்கு தெரியும் உண்மைகள் – இயற்கை விவசாயம் மூலம் உலக சாதனையே படைக்க முடியும். இரண்டாவது ஒரு மாநில அரசு மனசு வைத்தால் என்ன சாதனையும் செய்ய முடியும் என்று.

முழு செய்தியை Economic Times பத்திரிகையில் படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை விவசாயம் மூலம் உலக சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *