இயற்கை விவசாய உற்பத்தி – சந்தை மதிப்பு அதிகம்

இயற்கை விவசாயத்தைச் செய்துவரும் விவசாயிகள் சாகுபடி முறைகளை பதிவுசெய்து கொண்டால், விளைபொருளுக்கான சந்தை மதிப்பை முழுமையாகப் பெற முடியும் என மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சி.சின்னுசாமி தெரிவித்தார்.

மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் இயற்கைவழி வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  இதில் கல்லூரி முதல்வர் சி.சின்னுசாமி பேசியதாவது:

  • மண்ணில் அங்ககச் சத்துப் பொருள்கள் 0.5 சதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டதை தற்போது சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
  • அங்ககச் சத்தை மண்ணில் 2 சதம் அளவுக்கு கொண்டுவந்தால் மண் வளமடையும். இத்தகைய நிலத்தில் உற்பத்தியாகும் விளைபொருள்களுக்கு சந்தையில் நல்லவரவேற்பும், விளைபொருளுக்கு அதிக பணமதிப்பும் கிடைக்கிறது.
  • இயற்கைவழி விவசாயத்துக்கான தொழில் நுட்பங்களை வேளாண்மை பல்கலைக்கழகம், மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் வேளாண் அறிவியல் மையமும் வழங்கும்.விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
  • மதுரை அங்கக சான்றளிப்புத் துறை ஆய்வாளர் சி.ஞானசேகர் பேசுகையில், இயற்கைவழி விவசாயம் செய்யும் விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு அந்த நிலத்தில் ரசாயன உரம், பூச்சி மருந்தை பயன்படுத்தியிருக்கக்கூடாது.
  • இயற்கைவழி விவசாயிகள் தங்கள் சாகுபடிக்கான உரிமத்தை அங்கக சான்றளிப்புத் துறையில் பதிவுசெய்து உரிமம் பெறவேண்டும்.
  • சிறுகுறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2700-ம் பெரிய விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.3,200-ம், குழு அமைத்துச் செயல்படும் விவசாயிகள் ரூ.8,500-ம் செலுத்தவேண்டும் என்றார்.
  • அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விளக்கம் அளித்த ஆய்வாளர் மேலும் விவரங்களுக்கு மதுரை வேளாண் அறிவியல் மையத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *