இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்

இயற்கை வேளாண்மை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்தியாவில் வெளி வந்துள்ள ஆராய்ச்சி புத்தகத்தை பார்த்தோம்.

இப்போது உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற  University  of California Berkeley பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெளிவாக வந்துள்ள முடிவுகள்:

– ரசாயன விவசாயத்திற்கு ஒப்பிட்டு பார்த்தால்  இயற்கை விவசாயத்தில்  கிட்டத்தட்ட 19% மகசூல் குறைவு
– ஆனால, ஒரே வயலில் பலவகை பயிர்களை சாகுபடி செய்வதால் (ஊடு பயிர்கள் ) (Multi-cropping) இந்த வித்தியாசம் 8% ஆக குறைகிறது
– பயிர்களை மறு சுழற்சி செய்தால் (Crop rotation) இந்த வித்தியாசம் 9% ஆக குறைகிறது
– கடலை பீன்ஸ் போன்ற பலவகை பயிர்களில் ரசாயன வேளாண்மைக்கும் இயற்கை வேளாண்மைக்கும் மகசூலில் எந்த  வித்தியாசமும் இல்லை

ஆக மூலம் இயற்கை விவசாயத்தில் கிட்டத்தட்ட ரசாயன விவசாயத்தில் வரும் மகசூல் கிடைக்கும், இயற்கை விவசாயத்தில் செலவு குறைவானதால் லாபமும் அதிகம். ரிஸ்க் குறைவு..

நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்த்தல்  நீர்,நிலம் மாசுபடுதல் குறைகிறது. விவசாயிகள் ரசானயங்களை பயன் படுத்துவதால் வரும் உடல்நல கோளாறுகள் இல்லை

இப்போது ஐயோவா பல்கலை கழகத்தில் (Iowa State University) ஆராய்ச்சி மூலம் தெரிந்துள்ள உண்மைகள்:

–  பயிர் சுழற்சி மூலம் நிலத்தின் தன்மை முன்னேற்றமடைகிறது. ரசாயன ஊடு பொருட்கள் தேவை குறைகிறது
– ரசாயன விவசாயத்திற்கும் இயற்கை விவசாயத்திற்கும் அதிக அளவு மகசூல் வித்தியாசம் இல்லை
– நீர் நிலைகள் மாசு குறைகிறது

இந்த ஆய்வுகள்  அமெரிக்காவில் மிக பிரபலமான பல்கலை கழத்தில் இருந்து  வந்து உள்ளது… நம்பலாம் இல்லையா?

References:

– Iowa State University – Increasing Cropping System Diversity Balances Productivity, Profitability and Environmental Health

– University of California – Berkeley Research report –  Can organic crops compete with industrial agriculture?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்

  1. Danvanth says:

    நம்ப கூடாது….America மற்றும் European countries ௮னைத்தும் சதிகார நாடுகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *